வாக்களிப்பு சுமுகமான முறையில் நிறைவு! கணிசமானளவு வாக்குப் பதிவு

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகி சுமுகமான முறையில் தற்போது நிறைவடைந்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்களிப்பு 4 மணிவரை இடம்பெற்றது. சிறு சிறு அசம்பாவிதங்களோடு இம்முறை வாக்களிப்பு நிறைவடைந்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார். மேலும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க ஒருகோடியே 50 லட்சத்து 44,490 பேர் தகுதி பெற்றிருந்தனர்.நாடு பூராகவுமுள்ள 12,314 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

யாழ் மாவட்டத்தில் 59 வீதமான வாக்குப் பதிவுகளும், வவுனியாவில் 70 வீதமான வாக்குப் பதிவுகளும்,

கம்பஹா மாவட்டத்தில் 60 வீதமான வாக்குப் பதிவுகளும், நுவரெலியா மாவட்டத்தில் 70 வீதமான வாக்குப் பதிவுகளும்,

மாத்தளையில் 72 வீதமான வாக்குப் பதிவுகளும் கேகாலையில் 60 வீதமான வாக்குப் பதிவுகளும், பதுளையில் 60 வீதமான வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றன.

கொழும்பு மாவட்டத்தில் 76 வீதமானவர்களும், அனுராதபுர மாவட்டத்தில் 76 வீதமானவர்களும் வாக்களித்துள்ளனர்.

பொலனறுவையில் 75 வீதமானவர்களும், கேகாலையில் 70 வீதமானவர்களும் வாக்களித்துள்ளனர்.

முல்லைத்தீவில் 68 வீதமன வாக்குப் பதிவுகளும், அம்பாறையில் 70 வீதமான வாக்குகளும்,

திருகோணமலையில் 60 வீதமான வாக்குப் பதிவுகளும், மொனராகலையில் 65,

மாத்தறையில் 73 வீதமான வாக்குப் பதிவுகளும், அம்பாந்தோட்டையில் 70 வீதமன வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாள்ர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply