புதிய ஜனாதிபதியாக மைத்திரி
இலங்கையில் நேற்று வியாழக்கிழமை – 8-ம் திகதி நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 51.28 சதவீத வாக்குகளை வென்று வெற்றிபெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேஷப்பிரிய அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இலங்கையின் 7வது ஜனாதிபதித் தேர்தலில் 62 லட்சத்து 17 ஆயிரத்து 162 வாக்குகளைப் பெற்று மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றுள்ளார்.
இதன்படி, செல்லுபடியான வாக்குகளில் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்தார்.
இந்தத் தேர்தலில் 57 லட்சத்து 68 ஆயிரத்து 90 வாக்குகளுடன் 47.58 வீதமான வாக்குகளையே ஆளுங்கட்சி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷ வென்றுள்ளார்.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply