தீவிரவாத தாக்குதலை கண்டித்து பிரான்சில் 2 லட்சம் பேர் பேரணி
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் நகரில் சார்லி ஹெப்டோ என்ற வாரப்பத்திரிகை ஒன்றின் மீது கடந்த 7ந்தேதி தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து பிரான்ஸ் நாட்டின் வீதிகளில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்த நகரமான தவுலவுசில் 80 ஆயிரம் பேரும், தென்மேற்கு நகரமான பாவ் நகரில் 40 ஆயிரம் பேரும், மேற்கு நகரமான நான்டிசில் 30 ஆயிரம் பேரும், தென்கிழக்கு நைஸ் நகரில் 23 ஆயிரம் பேரும், மத்திய ஆர்லியன்ஸ் நகரில் 22 ஆயிரம் பேரும் மற்றும் கிழக்கு பெசன்கான் நகரில் 20 ஆயிரம் பேரும் திரண்டு வந்து தீவிரவாதத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனை உள்ளூர் அதிகாரிகள் மற்றும் ஊடக செய்தியாளர்களும் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply