ஊடகத்துறை அமைச்சின் புதிய செயலாளராக கருணாரத்ன பரணவிதான

ஊடகவியலாளரும், நூலாசிரியரும், ராஜதந்திர அதிகாரியுமான கருணாரத்ன பரணவிதான தகவல், ஊடக அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பணிப்பாளர் நாயகமாகவும். லேக்ஹவுஸ் நிறுவன ஆசிரியர் பீடப் பணிப்பாளராகவும், ரூபவாஹினி கூட்டுத்தாபன பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் பதவி வகித்த இவர், 2010 முதல் 2014 வரை கனடாவில் இலங்கை கொன்சல் ஜெனரலாகவும் பணியாற்றியுள்ளார்.

ஊடகத்துறை தொடர்பாக நீண்டகால அநுபவம் பெற்ற பரணவிதான களனி, கொழும்பு ஆகிய பல்கலைக் கழகங்களில் ஊடகத்துறை வெளிவாரி விரிவுரையாள ராகவும் பணியாற்றியுள்ளார். “நான்காவது அரசின் அரசியல்” என்ற தலைப்பில் ஊடக தர்மங்கள் தொடர்பான நூலையும் இவர் எழுதியுள்ளார்.

இரத்தினபுரி, லெல்லோபிட்ய திப்பிடிகல மகா வித்தியாலயம், இரத்தினபுரி சென் எலோசியஸ் கல்லூரி ஆகியவற்றில் பயின்ற இவர் கொழும்பு, இங்கிலாந்து பிரட்பர்ட் பல்கலைக்கழகங்களில் முறையே கலைத்துறை கெளரவ, சர்வதேச அரசியல் தொடர்பாக பட்டங்களையும் பெற்றுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply