இந்தியாவில் விவசாயிகளுக்காக சிறப்பு மையங்களை தொடங்க உள்ளோம்: இஸ்ரேல் அறிவிப்பு
இந்தியாவில் விவசாய துறையில் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இந்திய விவசாயிகளுக்காக சிறந்த மையங்களை உருவாக்க இஸ்ரேல் அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து இஸ்ரேல் நாட்டின் விவசாய துறை மந்திரி யாயிர் ஷமீர், குஜராத் வைப்ரண்ட் உலக மாநாடு 2015ல் செய்தியாளர்களிடம் பேசும்போது, விவசாய துறையில் ஆய்வு செய்வதற்காகவும் மற்றும் இந்தியாவில் பால் தொழிற்சாலைகளை ஊக்குவிக்கவும் சிறப்பு மையங்களை இஸ்ரேல் தொடங்கும் என்று கூறியுள்ளார். இதற்கான மையங்களை அரியானா, மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இஸ்ரேல் தொடங்க கூடும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவில் வெண்மை புரட்சி ஏற்படுத்த வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கை மீது இஸ்ரேல் நம்பக தன்மை கொண்டுள்ளது.
இந்தியாவில், பசிக்கு எதிராக போராடும் வகையில் அதற்கு உதவிட மற்றும் விவசாய துறையில் சில நல்ல ஆய்வுகளை செய்து உணவு பாதுகாப்பை ஏற்படுத்த இஸ்ரேலும் விரும்புகிறது என்று அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply