பிரதியமைச்சர் விஜயகலாவுக்கு வாழ்த்து

புதிய அமைச்சரவையில் பெண்கள் விவகார பிரதி அமைச்சராக விஜயகலா மகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளதை திட்டமிடல் சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் வாழ்த்து வரவேற்றுள்ளது. இது தொடர்பாக இச்சங்கம் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, புதிய அரசாங்கம் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தும் பொருட்டு சகல துறைகளிலும் பாரிய புரட்சியை ஏற்படுத்தும் என நாம் நம்புகின்றோம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ள புதிய அமைச்சரவையில் உள்ள சகலரும் நல்லாட்சிக்காகவும் ஊழல் மோசடியற்ற தேசமொன்றை கட்டியெழுப்பத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை.

குறிப்பாக கெளரவ பிரதி அமைச்சர், கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கில் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே பாரிய சேவைகளை ஆற்றியமை அனைவரும் அறிந்ததே. அதே போல் வடக்கு கிழக்கு மற்றும் நாட்டிலுள்ள யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களை தலைவராகக் கொண்ட குடும்பங்கள், அங்கவீனர்கள். மாற்றுத் திறனாளிகள் போன்றவர்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கான சேவைகளையும் சுய தொழில் முயற்சிகளையும் வழங்கி அவர்களின் வாழ்வை மலரச் செய்வார் என்பதில் ஐயமில்லை என நாம் திடமாக நம்புவதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply