சர்வகட்சிக் குழுவின் அரசியல் தீர்வு அறிக்கையுடன் புதுடில்லி செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஐபக்ஷ

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் நியமிக்கப்பட்ட சர்வகட்சிக் குழுவின் இறுதி ஆலோசனை அறிக்கையுடன் ஜனாதிபதி மஹிந்த ராஐபக்ஷ அடுத்த வாரம் இந்தியா செல்லவுள்ளதாகத் தெரியவருகிறது. தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்த சர்வ கட்சிக் குழுவின் அறிக்கை தெடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் கலந்தாலோசனை நடத்துவாரெனவும் நம்பப்படுகிறது.

சர்வ கட்சிக் குழுவின் இறுதியை அறிக்கையை அடுத்த வாரத்துக்குள் தன்னிடம் கையளிக்குமாறு குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவை ஜனாதிபதி கேட்டுள்ளதாகவும் தெரிகிறது. வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள எதிர்வரும் 6ஆம் திகதி சர்வகட்சிக் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படலாமெனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புது டில்லியில் நடைபெறவிருக்கும் வங்காள விரிகுடா நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பு மாகாநாட்டில் கலந்து கொள்வதற்காக செல்லவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வகட்சிக் குழுவின் இறுதி ஆலோசனை அறிக்கை, மற்றும் சமகால அரசியல் இராணுவ நிலவரம் தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு விளக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply