கடும் பாதிப்பு கொண்ட நாடுகளில் எபோலாவின் தீவிரம் குறைந்தது: உலக சுகாதார மையம் தகவல்
உலக நாடுகளிடையே எபோலா வைரஸ் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், அந்த நோய்த் தாக்குதல் ஆரம்பித்த மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் அதன் தீவிரம் தற்போது குறைந்து வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்தது. இது குறித்து உலக சுகாதார மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் புதிய புள்ளிவிவரங்களின் படி எபோலாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட சியாரா லியோன், கினியா, லைபீரியா போன்ற மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் அதன் தீவிரம் வெகுவாக குறைந்து வருவதாக தெரிவித்தது. மேலும் லைபீரியாவில் கடந்த ஜூன் மாதத்திற்கு பிறகும், கினியா மற்றும் சியாரா லியோனில் கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகும் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான எபோலா நோயாளிகளே கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தது.
சரிவு உண்மைதான், அதற்காக நோய்த்தடுப்பு போராட்டம் முடிந்து விட்டது என்று அர்த்தம் இல்லை என்று உலக சுகாதார மையத்தின் செய்தித்தொடர்பாளர் தாரிக் ஜசாரெவிக் கூறினார். அதே நேரம் இது நம்பிக்கைக்கான முதல் அறிகுறி என்றும் அவர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply