ஜனாதிபதி மைத்திரியின் தலைமையின் கீழ் செயற்படமாட்டேன் : மஹிந்த ராஜபக்ஷ
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக்கட்சியிலோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலோ நான் அங்கம் வகிக்க மாட்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களை கொழும்பிலுள்ள மேல்மாகாண முதலமைச்சரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று முன்தினம் மாலை மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து பேசியிருந்தார். இந்தச் சந்திப்பின்போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச, திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர, டக்ளஸ் தேவானந்தா, பிரபா கணேசன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையானோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர். இதேபோல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிலைமையும் அமைந்துள்ளது.
மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் ஐ.ம.சு.மு.வின் தலைவராகவும் இருக்கையில் அதில் நான் அங்கம் வகிக்கப்போவதில்லை. தேர்தலிலும் இந்தக் கட்சிகளின் சார்பில் என்னால் போட்டியிட முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply