24 மணி நேரத்தில் குறைந்தது 15 பேரை கொலை செய்துள்ளது ஐ எஸ்
சிரியாவில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய அரசு என்ற அமைப்பு கடந்த 24 மணி நேரத்தில் 15 பேரை வெளிப்படையாகக் கொலை செய்துள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.இந்தக் கொலைகள் நாட்டின் கிழக்கே பல நகரங்களில் செய்யப்பட்டுள்ளன என்று பிரிட்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகளுக்காக சிரிய கண்காணிப்பகம் எனும் அமைப்பு கூறுகிறது.
அந்தத் தீவிரவாத அமைப்பு முன்னேறி வருவதற்கு எதிராக நின்றவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பள்ளுவர்களே இவ்வகையில் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று அந்த மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இவ்வகையில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களை, இஸ்லாமிய அரசின் தீவிரவாதிகள் பின்னர் சிலுவையிலும் அறைந்துள்ளனர்.
மற்றொரு சம்பவத்தில், இராக்கில் குறைந்தது ஒருவர் உயரமான கட்டிடடம் ஒன்றிலிருந்து தூக்கி வெளியே வீசப்பட்டு கொலைசெய்யப்படும் படங்களும் வெளியாகியுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply