ஜனாதிபதி தலைமையில் முதலாவது பாதுகாப்பு சபை கூட்டம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான முதலாவது பாதுகாப்புச் சபைக் கூட்டம் நேற்றுக் காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற முதலாவது பாதுகாப்பு சபை கூட்டம் இதுவாகும் என்று பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தின் பணிப்பாளரும் பேச்சாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.புதிதாக கடமைகளை பொறுப் பேற்றுக்கொண்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்புச் செயலாளர் பி.எம்.யு.டி. பஸ்நாயக்க, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரிய, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் கோலித குணதிலக்க, பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.
நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பிலும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன் போது விரிவாக ஆராயப்பட்டதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply