பிரதமர் மோடி மீதான வழக்கு தள்ளுபடி: அமெரிக்கா வரவேற்பு

குஜராத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை, அமெரிக்க அரசு வரவேற்றுள்ளது. குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிபதி அனலிசா டோரஸ், வெளிநாட்டில் தலைமைப் பதவியை வகிக்கும் நபர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது என்று அமெரிக்க அரசு வாதிட்டதை ஏற்று, வழக்கை புதன்கிழமை தள்ளுபடி செய்தார். இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் வியாழக்கிழமை கூறியதாவது:

வெளிநாட்டில் தலைமைப் பதவியை வகிப்போர் மீது அமெரிக்க நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்ட பல வழக்குகள், இதற்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அவ்வகையில் பிரதமர் மோடிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதை வரவேற்கிறோம், என்றார் அவர்.

பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுவதற்காகவும், அதிபர் ஒபாமாவை சந்திப்பதற்காகவும் முதல் முறையாக அமெரிக்காவுக்குச் சென்றார். அவர் அங்கு சென்றடைவதற்கு சில தினங்களுக்கு முன்பு, நியூயார்க்கைச் சேர்ந்த அமெரிக்க நீதி மையம், இந்த வழக்கைத் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply