ஐ.எஸ். ஆதரவு ஜெர்மனியில் 2 பேர் கைது
இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக ஜெர்மன் தலைநகர் பெர்லினில் இரண்டு பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இஸ்மத் டீ (41), எமின் எஃப் (43) ஆகிய இந்த இருவரும், சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். அமைப்புக்கு ஆள்களை சேர்ப்பது, தளவாடங்கள் அனுப்புவது, நிதியுதவி அளிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர். பெர்லினில் 11 வீடுகளில் 250 போலீஸார் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின்போது இந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
எனினும், ஜெர்மனியில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்த இருவரும் சதித் திட்டம் தீட்டியதாகத் தெரியவில்லை என போலீஸார் தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply