மோதல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு குழிப்பதற்கும் ஆடைகளை மாற்றுவதற்கும் போதிய மறைவிடங்கள் இல்லை

சர்வதேச மகளீர் தினம் கடந்த 8ஆம் திகதி கொண்டாடப்பட்ட நிலையில் இலங்கையில் நடைபெற்றுவரும் மோதல்களால் பெரும் எண்ணிக்கையான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  
 விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் வன்னியில் தொடர்ந்துவரும் மோதல்களால் ஆயிரக்கணக்கான பெண்களும், தாய்மாரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வன்னியிலிருந்து திருகோணமலை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 1100 நோயாளர்களில் 661 பேர் பெண்கள் எனவும், இவர்களில் 256 பேர் மிகவும் கடுமையான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மோதல்களால் இடம்பெயர்ந்திருப்பவர்களில் கர்ப்பிணித் தாய்மாரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதுடன், வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து திருகோணமலை மற்றும் வவுனியா வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டிருந்த கர்ப்பிணித் தாய்மார்கள் பலர் குழந்தைகளைப் பிரசவித்திருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னியில் போதியளவு இன்மையால் ஏற்பட்டிருக்கும் பட்டினியால் இடம்பெயர்ந்திரு;ககும் மக்களில் பெருமளவு பெண்களும், சிறுவர்களுமே கூடுதலாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் தகவல்கள் கூறுகின்றன.

குறிப்பாக இடம்பெயர்ந்து தங்கியிருக்கும் பெண்களுக்குப் போதியளவு மறைப்பிட வசதிகள் இல்லையெனவும், இடம்பெயர்ந்து தங்கவைக்கப்பட்டிருக்கும் இடங்களில் சனத்தொகை அதிகமாக இருப்பதாகவும் தெரியவருகிறது. இதனால் பெண்கள் குழிப்பதற்கும், ஆடைகளை மாற்றுவதற்கும் பாதுகாப்பான மறைவிடங்கள் இல்லையெனத் தெரியவருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply