ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய நாடு திரும்புகிறார்
உயிராபத்து காரணமாக வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள ஊடகவியலாளர்களை நாடு திரும்புமாறு புதிய அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில்,அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று நாடு திரும்பவுள்ளதாக ஜெனிவாவில் வாழ்ந்து வரும் ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிர்வாகம் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அடக்குமுறையை கட்டவிழ்த்து விடாது என நம்பி, கடந்த 5 வருடங்கள் வெளிநாட்டு அஞ்ஞாதவாசத்தை முடித்து கொண்டு நாடு திரும்ப தீர்மானித்துள்ளதாக தேசப்பிரிய கூறியுள்ளார்.கடந்த காலங்களில் ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட அடக்குமுறைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அழுத்தம் கொடுக்க வேண்டியது தான் உள்ளிட்ட ஊடகவியலாளர்களின் கடமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊடகங்கள் தொடர்பில் புதிய அரசாங்கம் இதுவரை கடைப்பிடித்த நடைமுறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள சுனந்த தேசப்பிரிய, கடந்த ஒரு வாரத்தில் மகிந்த ராஜபக்வுக்கு பதிலாக மைத்திரிபால சிறிசேனவின் செய்திகளை அரச ஊடகங்கள் ஒளிப்பரப்பி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு திரும்பினாலும் போர் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களை தேடி தண்டிப்பது உட்பட பல மனித உரிமை தொடர்பான விடயங்கள் குறித்து நடத்தும் ஆர்ப்பாட்டங்களை நிறுத்தப் போவதில்லை எனவும் சுனந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply