அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு: வாலிபர் பலி – சுட்டுக் கொன்றவர் தற்கொலை
அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் மெல்பெர்ன் என்ற இடத்தில் வணிக வளாகம் உள்ளது. நேற்று காலை 9.30 மணியளவில் அந்த வணிக வளாகம் திறக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து அங்கு 100–க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் அங்கு வந்தனர். அங்குள்ள உணவு வளாகத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.அதில் வாலிபர் ஒருவர் பலியானார். பெண் காயம் அடைந்தார். பின்னர் அந்த நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.அதைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அதில் துப்பாக்கியால் சுட்ட நபர் ஜோஸ் கார்சியா, ரோட்ரிகுயஷ் (57) என தெரியவந்தது. அவரது மனைவி இட்னாரிஸ் கார்சியா ரோட்ரிகுயஷ் (33) அங்கு பணிபுரிகிறார்.அவரை கொலை செய்வதற்காகவே அவர் துப்பாக்கி சூடு நடத்தியிருப்பது தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் இட்னாரிஸ் காயம் அடைந்துள்ளார்.இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தற்கொலைக்கு முயன்ற இட்னாரிசின் கணவர் ஜோஸ்கார்சியாவும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் இச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.குடும்ப தகராறு காரணமாக இந்த துப்பாக்கி சூடு நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே துப்பாக்கி சூட்டில் பலியானவர் யார் எனற விவரம் தெரியவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply