விடுதலைப் புலிகளின் நிதிப் பிரிவுப் பொறுப்பாளர் : தமிழேந்தி பலி
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதிப் பிரிவுக்குப் பொறுப்பான தமிழேந்தி என அழைக்கப்படும் சுபரத்தினம் செல்வத்துரை இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் இன்று தெரிவித்தது.
புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் கடந்த ஒரு வார காலமாக இடம்பெற்று வந்த மோதலின் போதே அவர் கொல்லப்பட்டதாகவும் இந்தப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் 150 க்கும் மேற்பட்ட சடலங்களைப் இராணுவத்தினர் மீட்டுள்ளதாகவும் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் இன்று அறிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply