மைத்திரி, சந்திரிகா மற்றும் மஹிந்தவை ஒன்றிணைக்க முயற்சி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிகா பண்டாரநாயக ஆகியோரை ஒரே மேடைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. கடந்த காலங்களில் கட்சிக்குள் ஏற்பட்ட பல்வேறு பட்ட கருத்து மோதல்கள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்துள்ள நிலையில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தற்பொழுது இந்த முயற்சியில் இறங்கியுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.எதிர்வரும் தேர்தல்களின் போது கட்சி வெவ்வேறாக பிரியும் அபாயம் காணப்படுவதால், சுதந்திரக் கட்சியின் முக்கிய மூன்று தூண்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிகா பண்டாரநாயக ஆகியோரை ஒரே தேர்தல் மேடையில் ஏற்றி கட்சியை பாதுகாக்கும் பாரிய முயற்சியில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகிறனர்.
கடந்த வாரங்களில் கட்சின் தலைவர் தொடர்பில் எழுந்த பிரச்சினையின் போது கட்சி உறுப்பினர்கள் இரு பிரிவுகளாக பிரியும் அபாயம் ஏற்பட்டதை அடுத்து, கட்சியை மீண்டும் வெற்றியின் பாதையில் கொண்டு செல்வதற்காக ஜனாதிபதிகள் மூவரையும் ஒரே மேடைக்கு கொண்டுவர வேண்டிய கட்டாயம் காணப்படுவதாக சுதந்திரக் கட்சியின் கிராமிய தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் கட்சியின் கிராமிய மட்ட உருப்பினர்களிடத்திலும் பாரிய பின்னடைவு காணப்படுவது தொடர்பிலும் கட்சி கூட்டத்தின் போது கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது, ஆகவே மீண்டும் கட்சியை கிராமிய மட்டத்திளிலிருந்து வெற்றியின் பாதைக்கு கொண்டு செல்வதற்கான திட்டங்களில் மும்முரமாக ஈடுபடவேண்டிய அவசியம் காணப்படுவது தொடர்பில் ஆராயப்பட்ட போது, சிரேஷ்ட உறுப்பினர்கள் கட்சின் பிரதான மூன்று தூண்களையும் ஒரே மேடையில் ஏற்றி அதன் மூலம் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கட்சின் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
என்றாலும் இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனோ, முன்னாள் ஜனாதிபதிகள் உடனோ பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக ஆகியோர் ஒன்றிணைந்து எதிராக வேலை செய்தததால் மூவரையும் ஒரே மேடைக்கு கொண்டு வருவது மிகவும் கடினமான காரியம் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply