தேர்தலின் பின்னர் நல்லாட்சியில் சந்தேகம் எழுந்துள்ளது – அனுர பிரியதர்சன யாப்பா
இத்தனை காலமும் நாட்டில் அடக்கு முறைகளும் கொலை, கொள்ளை என்பன கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. எனினும் ஆட்சிமாற்றத்தின் பின்னர் அவை மீண்டும் தலைதூக்கியுள்ளன என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செய்தியாளர் சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே கட்சியின் பொதுச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்;
சில தினங்களுக்கு முன்னர் எமது பிரதேச சபை உறுப்பினர்கள் மீது அசிட் வீசப்பட்டுள்ளது. வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. தேர்தல் முடிவடைந்த பின்னர் சுமார் இரு நூற்றுக்கும் அதிகமான தாக்குதல் சம்பவங்கள் எமக்கெதிராக இடம்பெற்றுள்ளது. ஆனால் இதுவரை சட்ட நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை.
ஜனாதிபதித் தேர்தல் வரையில் சுயாதீனமா கவே செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. சர்வதேச கண்காணிப்புக்களின் மத்தியில் நல்லதொரு தேர்தல் இடம்பெற்றது. எனினும் தேர்தலின் பின்னர் நல்லாட்சியில் சந்தேகம் எழுந்துள்ளது.
ஜனாதிபதி எமது கட்சியின் தலைவர். அவர் எமக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்குகின்றார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சுயாதீன விசாரணையொன்றிற்கு இடமளிப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அடி மட்டத்திலும் அமைச்சுப் பதவிகளில் இருக்கும் உறுப்பினர்களின் அடாவடித் தனமான செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
தலைமைத்துவத்தின் மீது நாம் குற்றம் சொல்லவில்லை. ஆனால் ஒரு சிலரின் செயற்பாடுகள் மோசமாகிவிட்டன. புதிய அரசிடம் நாம் கேட்டுக்கொள்வது நாட்டில் நல்லாட்சியினை செயற்படுத்த வேண்டும் என்பதே எனவும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply