பிரிக்கப்படாத நாட்டிற்குள் தேசிய பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் : இரா.சம்பந்தன்
தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என நம்புகிறோம். அதற்கு நாட்டு மக்களில் பெரும்பான்மையானவர்கள் ஆதரவு வழங்குவரென எதிர்பார்ப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார். தேர்தலின் பின்னர் நடைபெற்ற முதலாவது பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, புதிய ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எமது பாராட்டை தெரிவிக்கிறோம்.
எதுவித பலனும் எதிர்பார்க்காமலே நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கினோம். மக்களின் உணர்வுகளுக்கு இடமளித்து செயற் பட்டோம்.
முழு நாட்டு மக்களுக்கும் தேர்தலின் போது சமமான வாய்ப்பு வழங்கப்படவில்லை. தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரங்களுக்கு அரச அதிகாரம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது.
வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்கள் ஆர்வமாக வாக்களித்தார்கள். நாட்டில் மாற்றமொன்றை ஏற்படுத்த தமது ஒத்துழைப்பை வழங்கினார்கள். 100 நாள் திட்டத்தினூடாக முழு நாட்டிற்கும் நன்மை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். பிரிக்கப்படாத நாட்டிற்குள் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
கடந்த 60 வருட காலத்தில் எமக்கு முன் பல அனுபவங்கள் காணப்படுகின்றன. நாடு பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தது. தமிழ் மக்கள் முகம் கொடுத்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். அது குறித்து எமக்கு நம்பிக்கை உள்ளதோடு. நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் இதற்கு தமது ஆதரவை வழங்குவர் என எதிர்பார்க்கிறோம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply