பொய்யான பிரசாரங்களை வடக்கு மக்கள் நிராகரித்துள்ளனர்: ஜனாதிபதி

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின்  தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை  தேர்தல் செயற்பாட்டில்  ஈடுபடுத்திக்கொண்டபோது பொய்யான  பிரசாரங்கள் முன்வைக்கப்பட்டன.   ஆனால் அவ்வாறான அனைத்து பொய்யான பிரசாரங்களையும் மக்கள் நிராகரித்துள்ளனர் என்று  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டுக்கு தேவையான மாற்றத்தை   நிச்சயம் செய்வோம்.  இதற்காக அரசியல்  துறையில் அனைவரும்  சில  அர்ப்பணிப்புக்களையும் தியாகங்களையும் செய்யவேண்டியேற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இராஜகிரியவில் அமைந்துள்ள சந்தஹம் செவன பௌத்த நிலையத்தில்  இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே   ஜனாதிபதி மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே  ரத்தன தேரர் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன அங்கு மேலும் உரையாற்றுகையில்,

நாட்டை முன்னேற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்பதனை அன்று மடிகே  பஞ்சாசீக  தேரர் கூறியிருந்தார்.  அதனை இங்கு  ஞாபகப்படுத்தவேண்டும். கட்சிகளுக்காக பிரிந்து போராடும் காலம்  முடித்து    மக்களின்  மனதில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவதற்கு    எம்மை அர்ப்பணிக்கவேண்டும்.

நாட்டுக்கு தேவையான மாற்றத்தை   நிச்சயம் செய்வோம்.  இதற்காக அரசியல்  துறையில் அனைவரும்  சில  அர்ப்பணிப்புக்களையும் தியாகங்களையும் செய்யவேண்டியேற்படும்.

சுதந்திரத்தின் பின்னர்    இலங்கையின் அரசியல் கட்சிகள்   மேற்கொண்ட பயணத்தில்   சிறந்த  மற்றும் ஆரோக்கியமற்ற அனுபவங்கள்  ஏற்பட்டுள்ளன.   அந்த  ஆரோக்கியமற்ற  அனுபவங்களின்போது நாடு  பின்னடைவு கண்டது.  எனவே நாங்கள் இன்று  வரலாற்று ரீதியான    செயற்பாட்டை  மேற்கொள்ளவேண்டியுள்ளது.

தேர்தலுக்கு முன்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களன்  தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை  தேர்தல் செயற்பாட்டில்  ஈடுபடுத்திக்கொண்டபோது பொய்யான  பிரசாரங்களை  முன்வைத்தனர்.  ஆனால் அவ்வாறான அனைத்து பொய்யான பிரசாரங்களையும் மக்கள் நிராகரித்துள்ளனர். அத்துடன் நீண்டகாலமாக நாட்டில் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கவேண்டும் என்ற  கருத்து  மக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply