ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் அரசியல் பழிவாங்கலும் பிரிவினைக்கான ஒப்பந்தமும் மட்டுமே காணப்படுகின்றன : கல­கொட அத்தே ஞான­சார தேரர்

ஆட்சி மாற்­றத்தின் பின்­ன­ணியில் அர­சியல் பழி­வாங்­கல்­களும் பிரி­வி­னைக்­கான ஒப்­பந்­தமும் மட்­டுமே காணப்­ப­டு­கின்­றன. ஜன­நா­யக சாயம் பூசி வடக்கு கிழக்­கிற்­கான தேவைகள் பூர்த்தி செய்­யப்­ப­டு­கின்­ற­தென குற்றம் சுமத்தும் பொது­பல சேனா பெளத்த அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் சர்­வ­தே­சத்தின் முன்­னி­லையில் சிங்­கள பெளத்த இனத்தை நிர்­வா­ணப்­ப­டுத்தும் செயலை தேசிய அர­சாங்கம் செய்­வ­தா­கவும் தெரி­வித்தார். பொது­ப­ல­சேனா பெளத்த அமைப்­பினால் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது,

தற்­போது ஏற்­பட்­டுள்ள ஆட்சி மாற்­ற­மா­னது நாட்­டிற்கும் சிங்­கள பெளத்த அமைப்­பிற்கும் நன்­மையைத் தரு­மென நினைப்­பது வெறும் கனவு மட்­டுமே. சிங்­கள மக்­களை அழிக்­கவே தற்­போ­தைய தேசிய அர­சாங்கம் செயற்­பட்டு வரு­கின்­றது. அனை­வ­ரையும் ஒன்­றி­ணைத்து கூட்டு ஆட்­சி­யினை உரு­வாக்­கி­யி­ருப்­பது சாத­க­மா­ன­தென வெளியில் விளம்­ப­ரப்­ப­டுத்­து­கின்­றனர். ஆனால் மறை­மு­க­மாக சர்­வ­தேச சதித்­திட்டம் அரங்­கே­று­கின்­றது.

அர­சியல் பழி­வாங்­கல்கள்

மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்­து­வது தொடர்பில் எமக்கு தனிப்­பட்ட கருத்து எது­வு­மில்லை. ஆனால் தற்­போது ஏற்­பட்­டுள்ள ஆட்சி மாற்­றத்தின் பின்­ன­ணியில் தனிப்­பட்ட அர­சியல் பழி­வாங்கல் மட்­டுமே உள்­ளது. முன்னாள் ஜனா­தி­பதி பாது­காப்புச் செய­லாளர் ஆகியோர் மற்றும் அவர்­க­ளது குடும்­பத்தின் மீது தவ­றான கருத்­துக்­களை பரப்பி ஒரு சிலரின் தனிப்­பட்ட கோபங்­க­ளுக்­காக பழி­வாங்கப் பார்க்­கின்­றனர். யார் குற்றம் செய்­தாலும் அதற்­கான தண்­டனை வழங்­கப்­பட வேண்டும். ஆனால் செய்­யாத குற்­றங்கள் எதையும் ஒருவர் மீது சுமத்தி அவரை தண்­டிக்க நினைப்­பது ஏற்­றுக்­கொள்ள முடி­யாத விடயம். அதையே தற்­போது புதிய அர­சாங்கம் செய்து வரு­கின்­றது.

பிரி­வினை வளர்­கின்­றது

ஆட்சி மாற்றம் அதன் பின்னர் நூறு நாட்கள் வேலைத்­திட்டம் என மக்­களை ஏமாற்றும் வேடிக்­கைகள் காணப்­பட்­டாலும் ஆட்சி மாற்­றத்தின் பின்­ன­ணியில் புலம்­பெயர் அமைப்­பு­க­ளுக்கு ஏற்ற வகையில் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு தேவை­யான பிரி­வினை வளர்க்­கப்­ப­டு­கின்­றது. தமிழ் அமைப்­பு­களின் தனி நாட்டுக் கோரிக்­கை­க­ளுக்கு அமைய வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. ஊட­கங்­க­ளுக்கும் மக்­க­ளுக்கும் தெரி­யாது வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் கோரும் தனி நாட்டுக் கோரிக்­கைகள் நிறை­வேற்­றப்­பட்டு வரு­கின்­றன. முப்­பது வரு­டங்கள் போராடி விடு­தலைப் புலி­க­ளினால் வென்­றெ­டுக்க முடி­யாத தனி நாட்­டினை தற்­போது அர­சியல் உடன்­ப­டிக்­கை­களின் மூலம் வென்­றெ­டுக்க முயற்­சிக்­கின்­றனர்.

கடா­பியைப் போல் பார்க்­கின்­றனர்

லிபி­யாவில் நடந்த எவையும் இலங்­கையில் இடம்­பெ­ற­வில்லை. மக்­க­ளுக்கு தேவை­யா­ன­வற்­றையே மஹிந்த ராஜபக் ஷ செய்து கொடுத்தார். ஆனால் தற்­போது பிரி­வினை வாதிகள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து முன்னாள் ஜனா­தி­ப­தி­யையும் பாது­காப்பு செய­லாளர் கோத்தபாய ராஜபக் ஷவையும் கடாபி போன்­றோ­ருக்கு சம­மாக ஒப்­பி­டு­கின்­றனர்.

சிங்­கள பெளத்தம் காப்­பாற்­றப்­பட்­டது இவர்­க­ளினால் மட்­டுமே. ஆனால் காப்­பாற்றி பாது­காத்து வந்த சிங்­கள பெளத்த கொள்­கை­யினை புதிய அர­சாங்கம் முற்­றாக அழித்து வரு­கின்­றது. சர்­வ­தே­சத்தின் மத்­தியில் சிங்­கள பெளத்த மதத்­தி­னையும் இனத்­த­வ­ரையும் நிர்­வா­ணப்­ப­டுத்தி அசிங்­கப்­ப­டுத்தும் வகையில் இவர்கள் செயற்­பட்டு வருகின்றனர்.

எம்மை கட்டுப்படுத்த முடியாது

ஆனால் நாம் தொடர்ந்தும் பெளத்த சிங்கள இனத்தினை காப்பாற்ற போராடுவோம். பெளத்த இந்து கலாசாரம் இன்று முஸ்லிம், கிறிஸ்தவ தீவிரவாதிகளால் அழிக்கப்பட்டு வருகின்றது. இதனை நாம் தடுக்க சகல விதத்திலும் போராடுவோம். எம்மை யாராலும் கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply