மாத்தறை தற்கொலைத் தாக்குதலுக்கு பிரிட்டன் கடும் கண்டனம்
மாத்தறையில் மீலாத் விழாவின் போது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமையை பிரித்தானியா வன்மையாகக் கண்டித்துள்ளது. மாத்தறையில் நடந்த தற்கொலைத் தாக்குதலை, பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைச்சர் மெலக் பிறவுன் பிரபு கண்டித்துள்ளதாக, கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானியராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சகல இலங்கை சமூகத்தினரையும் இந்தப் பிரச்சினை பாதிக்கிறது என்பது, அக்குரஸ்ஸ தற்கொலை குண்டுத் தாக்குதல் மூலம் நினைவூட்டப்படுவதாக பிரிட்டிஷ் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வடக்கில் மோதல் இடம்பெறும் பிரதேசங்களில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் ஒருவர் உட்பட பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளமை குறித்தும் கவலை வெளியிட்டுள்ள அவர், நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு சகல இலங்கை சமூகத்தினரினதும் நியாயமான அபிலாஷைகளைக் கருத்திற் கொண்டே ஒரு அரசியல் தீர்வு அத்தியாவசியமானது என்ற பிரித்தானியாவின் நம்பிக்கையை மீள வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply