ஜெர்மனியில் பள்ளிக்கூடத்துக்குள் பழையமாணவன் துப்பாக்கியால் சுட்டதில் 16 பேர் பலி
ஜெர்மனியில் பாடசாலையினுள் நுழைந்த ஆயுததாரி 9 மாணவர்கள் 3 ஆசிரியர்கள் உட்பட 16 பேரை சுட்டுக் கொன்றான்
ஜெர்மனியில் தான் கல்வி கற்ற பாடசாலையினுள் நுழைந்த ஆயுததாரி 9 மாணவர்கள் 3 ஆசிரியர்கள் உட்பட 16 பேரை சுட்டுக் கொன்றவன் காவல்துறையினால் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜெர்மனியின் தென்மேற்கே வினிண்டென் என்ற நகரில் உள்ள தனது முன்னாள் பள்ளிக்குள் கருமை நிற போர் ஆடைகள் அணிந்து சென்ற பதின்ம வயது நபர் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 16 பேரை துப்பாக்கி முனையில் சுட்டுக்கொன்றுள்ளான்.
கொலை செய்துவிட்டுத் தப்பிச் செல்வதற்காக தெருவில் மோட்டார் கார் ஒன்றை திசைதிருப்பி கடத்திச் செல்லும்போது சூப்பர் மார்க்கெட் ஒன்றின் வாகன நிறுத்த வளாகத்தில் வைத்து காவல்துறையினரால் மடக்கப்பட்ட போது ஏற்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஆயுததாரி உயிரிழந்துள்ளான்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply