கேமரூனில் ராணுவ தாக்குதலில் 120 தீவிரவாதிகள் பலி
நைஜீரியாவில் தங்களது ஆதரவு ஆட்சியை நிறுவுவதற்காக போகோ ஹரம் தீவிரவாதிகள் தொடர்ந்து அப்பாவி பொதுமக்களை கடத்துவது, மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் நைஜீரிய ராணுவத்துடன் பல்வேறு நாடுகளின் படையினரும் ஈடுபட்டு உள்ளனர். தீவிரவாதிகளின் தாக்குதல் நைஜீரியாவின் அண்டை நாடான கேமரூன் மற்றும் சாட் நாடுகளின் எல்லைப்பகுதிகளிலும் நீடித்து வருகிறது. இதனால் இந்த 2 நாடுகளின் ராணுவமும் தீவிரவாதிகளுடன் மோதி வருகிறது.
இந்தநிலையில் கேமரூனின் வடக்கு பகுதியில் சாட் நாட்டின் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் நேற்றுமுன்தினம் போகோ ஹரம் தீவிரவாதிகள் 120 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த மோதலில் 3 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். இதனை சாட் நாட்டு ராணுவம் தெரிவித்து உள்ளது.
நைஜீரியா, சாட், கேமரூன், நைஜர் மற்றும் பெனின் ஆகிய நாடுகளின் எல்லையை கடந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதை முறியடிப்பதற்காக 7,500 ராணுவ படைகளை அனுப்ப ஆப்பிரிக்க யூனியன் முடிவு செய்து உள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக்கூட்டம் அடுத்த வாரம் கேமரூன் தலைநகரில் நடைபெற உள்ளதாக கானா ஜனாதிபதி ஜான் அஹமா தெரிவித்து உள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply