ஷிராணி சட்டரீதியாக வெளியேற்­றப்­ப­டவும் இல்லை மொஹான் பீரிஸ் சட்­டரீதியாக நிய­மிக்கப்பட­வு­மில்லை : சுமந்­திரன் எம்.பி.

முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் ஷிராணி பண்­டா­ர­நா­யக்க சட்­டரீதியாக வெளியேற்­றப்­ப­டவும் இல்லை. அதே­வேளை மொஹான் பீரிஸ் சட்­டரீதியாக நிய­மிக்கப் பட­வு­மில்லை என நேற்று சபையில் தெரிவித்த தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு எம்.பி எம்.எஸ். சுமந்­திரன் 100 நாள் அர­சியல் திட்­டத்­திற்கு எதிர்க் கட்சி ஆத­ரவு வழங்­கி­யதன் மூலம் ஷிராணி பண்­டா­ர­நா­யக்­கவை பிர­தம நீதி­ய­ர­ச­ராக ஏற்­றுக்­கொண்­டுள்­ள­தா­கவும் அவர் தெரிவித்தார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் மொஹான் பீரிஸ் தொடர்­பான விவா தத்தில் உரை­யாற்றும் போதே சுமந்­திரன் எம்.பி. இவ்­வாறு தெரிவித்தார்.

சபையில் அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;

அர­சி­ய­ல­மைப்பின் 107 ஆவது திருத்­தத்­திற்­க­மைய அர­சி­ய­ல­மைப்பு சபையால் பிர­தம நீதி­ய­ர­சரின் பெயர் பரிந்­துரை செய்­யப்­படும். அவ்­வாறு பரிந்­துரை செய்­யப்­படும் ஒரு­வரை ஜனா­தி­பதி நீதி­ய­ர­ச­ராக நிய­மிப்பார்.

அதை­வி­டுத்து அர­சி­ய­ல­மைப்பின் பரிந்­து­ரையை மீறி பிர­தம நீதி­ய­ர­சரை ஜனா­தி­ப­தியால் நிய­மிக்க முடி­யாது. ஷிராணி பண்­டா­ர­நா­யக்­கவை வெளியேற்­று­வ­தற்­கான பிரே­ரணை பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

அது தொடர்பில் தெரிவுக்­குழுக் அமைக்­கப்­பட வேண்­டு­மென்றே பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது. ஆனால் ஷிராணி பண்­டா­ர­நா­யக்க பிர­தம நீதி­ய­ரசர் பத­வி­யி­லி­ருந்து வெளியேற்­றப்­பட்டார்.

இந்­நி­லை­மை­யி­லேயே மொஹான் பீரிஸ் ஜனா­தி­ப­தியால் பிர­தம நீதி­ய­ர­ச­ரானார். ஆனால் அவர் அப்­ப­த­விக்கு நிய­மிக்­கப்­ப­ட­வில்லை.

இதே­வேளை புதிய அர­சாங்­கத்தின் 100 நாள் வேலை திட்­டத்தில் ஷிராணி பண்­டா­ர­நா­யக்கவை மீண்டும் பிர­தம நீதி­ய­ர­ச­ராக்­குவோம் எனத் தெரிவிக்­கப்­பட்­டி­ருந்­தது.

எனவே 100 நாள் திட்­டத்­திற்கு ஆத­ரவு வழங்­கு­வ­தென எதிர்க்­கட்சி தெரிவித்தது. இதனால் இதனை எதிர்க்கட்சி ஏற்றுக் கொண்டுள்ளது என்றே கூற வேண்டும்.

மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசராக நியமிக்கப்படவுமில்லை எனவே அவர் வெளியேற்றப்படவும் இல்லை. எனவே நியமிக்கப்படாத ஒருவரை எவ்வாறு வெளியேற்ற முடியும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply