கலிதா ஜியா அறிவித்த முழு அடைப்பு வன்முறையில் 42 பேர் பலி: போலீஸ் விசாரணைக்கு கோர்ட் உத்தரவு
வங்காள தேசத்தில் கடந்த 1991–96, 2001–06 காலகட்டங்களில் பிரதமர் பதவி வகித்தவர் கலிதா ஜியா (வயது 69). கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி நடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலை கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சி புறக்கணித்து. இதனால், அந்த தேர்தலில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கூட்டணி கட்சி பெரும்பான்மை பெற்றது. ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமரானார்.
தேர்தலில் தில்லுமுல்லு செய்து ஷேக் ஹசீனா பிரதமராகி விட்டதாக குற்றம்சாட்டி வரும் கலிதா ஜியா, கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்ற தினமான அதே ஜனவரி 5-ம்தேதியை இந்த ஆண்டு ‘ஜனநாயக படுகொலை தினம்’ ஆக அனுசரிக்கப்போவதாக அறிவித்திருந்தார்.
இதையொட்டி, கடந்த 5-ம்தேதி நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் அவர் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிலையில், டாக்கா நகரில் உள்ள வங்காளதேச தேசியவாத கட்சி அலுவலகத்தில் கடந்த மாதம் 3-ம்தேதி இரவு தொண்டர்களுடன் கலிதா ஜியா ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த போலீசார் அவரை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், எனவே, அந்த அலுவலகத்தை விட்டு வெளியேற அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தனர். இதனையடுத்து, 17 நாட்களை அவர் தனது அலுவலகத்திலேயே கழிக்க நேர்ந்தது.
இதனையடுத்து, பிப்ரவரி 1-ம்தேதி முதல் நாடு தழுவிய 72 மணிநேர போராட்டத்துக்கு கலிதா ஜியா அழைப்பு விடுத்தார். இந்த போராட்டத்தை முறியடிக்கும் விதமாக கலிதா ஜியா வீட்டுக்கு செல்லும் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சி அறிவித்த 72 மணிநேர முழுஅடைப்பு நேற்று முன்தினம் தொடங்கியது. பந்த் அழைப்பை புறக்கணித்து செயல்பட்ட வாகனங்கள் மற்றும் சில கடைகள் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். தலைநகர் டாக்காவில் நடைபெற்ற ஆளும்கட்சி- எதிர்க்கட்சியினர் இடையிலான மோதலில் இருவர் பலியாகினர்.
நேற்று ஒரே நாளில் 38 அரசு பஸ்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. சில பஸ்கள் தீயிட்டும் எரிக்கப்பட்டன. பலத்த தீக்காயங்களுடன் பலர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென்கிழக்கு சிட்டகாங் ரெயில் நிலையம் அருகே சுமார் 42 அடி நீள தண்டவாளத்தை போராட்டக்காரர்கள் பெயர்த்து எடுத்து விட்டதால் அவ்வழியாக வந்த மெய்மென்சிங் எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஞ்சினும் இரு முன்வரிசை பெட்டிகளும் தடம் புரண்டு கவிழ்ந்தது. இதில் ரெயிலின் டிரைவரும் 4 பயணிகளும் காயமடைந்தனர்.
இன்று இந்த முழு அடைப்பு மூன்றாம் நாளை எட்டியுள்ள நிலையில் டாக்கா-சொவ்டோகிராம் நெடுஞ்சாலை வழியாக சென்ற ஒரு பஸ்சை போராட்டக்காரர்கள் வழிமறித்து பெட்ரோல் குண்டுகளை வீசி தாகியதில் 7 பேர் பலியாகினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் 16 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஷேக் ஹசினாவின் ஆட்சிக்கு எதிராக 28 எதிர்க்கட்சிகள் நடத்திவரும் தொடர் பந்துக்கு இதுவரை சுமார் 54 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், போராட்டம் என்ற பெயரில் கலவரத்தை தூண்டிவிட்டு கடந்த வாரம் வரை 42 பேர் பலியாவதற்கு காரணமாக இருந்ததாக கலிதா ஜியா மீது கூறப்படும் குற்றச்சாட்டின்கீழ் உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி போலீசாருக்கு டாக்கா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply