வீண்செலவுகளை தவிர்க்கும் வகையில் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் : பாராளுமன்ற மைதானத்தில் 2500 விசேட பிரமுகர்களுக்கு அழைப்பு

இலங்கை ஜன­நா­யக சோச­லிஷ குடி­ய­ரசின் 67 ஆவது சுதந்­திர தினம் இன்­றாகும். இம்­முறை 67 ஆவது சுதந்­திர தேசிய வைபவம் இலங்­கையின் நிரு­வாக தலைநக­ர­மான ஸ்ரீ ஜய­வர்­த­ன­பு­ரவில் அமைந் துள்ள பாரா­ளு­மன்ற மைதா­னத்தில் மிக எளி­மை­யாக இடம்­பெ­று­வ­தற்­கான அனைத்து ஏற்­பா­டு­க­ளையும் உள்­துறை அமைச்சு பூர­ணப்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்த நிலையில் பாது­காப்பு மற்றும் போக்­கு­வ­ரத்து ஏற்­பா­டு­களை பொது­மக்கள் ஒழுங்­குகள் அமைச்சு பூர­ணப்­ப­டுத்­தி­யுள்­ளது. ‘ அற்­பு­த­மான நாடு – ஒளி­ம­ய­மான நாளை ‘ என்ற தொனிப்­பொ­ருளின் கீழ் இம்­முறை சுதந்­திர தின நிகழ்­வுகள் இடம்­பெ­ற­வுள்­ளது.ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் இடம்­பெ­ற­வுள்ள இந்த நிகழ்வில் முப்­ப­டைகள் மற்றும் பொலி­ஸாரின் விஷேட அணி­வ­குப்பு மரி­யா­தையும் நடனக் கலை­ஞர்­களின் விஷேட கலா­சர நிகழ்­வு­களும் இடம்­பெ­ற­வுள்­ளன. எனினும் இம்­முறை வீண் செல­வுகள் தவிர்க்­கப்­பட்டு சுதந்­திர தின வைபவம் மிக எளி­மை­யாக கொண்­டா­டப்­ப­டு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் பூர்த்தி செய்­யப்­பட்­டுள்­ளது.

அதன்­படி இம்­முறை வான் சாக­சங்கள்இ கடல்­மார்க்­க­மான சாக­சங்கள் தவிர்க்­கப்­பட்­டுள்­ள­தாக அறி­ய­மு­டி­கின்­றது. ஜனாதி மைத்­தி­ரி­பால சிறிசேன இம்­முறை சுதந்­திர தின நிகழ்­வு­களின் போது வீண் செல­வு­களை குறைப்­ப­தற்­கான அனைத்து ஆலோ­ச­னை­க­ளையும் உள்­துறை அமைச்­சுக்கு வழங்­கி­யுள்­ள­தா­கவும் அதன்­படி நாட­ளா­விய ரீதியில் இடம்­பெறும் அனைத்து சுதந்­தி­ர­தின அணி­வ­குப்பு மரி­யா­தை­களின் போதும் செல­வுகள் குறைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் உள்­துறை மற்றும் மீன் பிடி அமைச்சின் செய­லாளர் எஸ்.டீ.ஏ.பொர­லெஸ்ஸ குறிப்­பிட்டார்.

தேசிய சுதந்­தி­ர­தின நிகழ்­வு­களில் கலந்­து­கொள்ள சுமார் 2500 விஷேட பிர­மு­கர்கள் அழைக்­கப்­பட்­டுள்ள நிலையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு அழைப்பு விடுக்­கப்­ப­ட­வில்லை. இத­னை­விட இந்த சுதந்­தி­ர­தின நிகழ்வின் ஏற்­பாட்­டா­ளர்­களின் கணிப்பின் பிர­காரம் 15000 பொது­மக்கள் பார்­வை­யா­ளர்­க­ளக இருப்பர் என அறி­ய­மு­டி­கின்­றது.

இந் நிலையில் சுதந்­திர தின நிகழ்­வு­க­ளுக்­கான இறுதி ஒத்­திகை நிகழ்­வுகள் நேற்று காலை நடை­பெற்­றன. அதன்­படி இன்று இடம்­பெறும் சுதந்­திர தின நிகழ்­வு­களில் முப்­ப­டைகள் மற்றும் பொலிஸ் படை­யை­யி­னரின் அணி­வ­குப்பு மரி­யாதை நிகழ்வில் 5922 பேர் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். இத­னை­விட குதி­ரைப்­படைஇ யானைப்­ப­டை­களின் அணி­வ­குப்­புக்­களும் இங்கு இடம்­பெ­று­வ­தற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன. இந்த அணி­வ­குப்பு நிகழ்­வு­களைத் தொடர்ந்து சுமார் 600 பேர் கொண்ட நடனக் கலை­ஞர்­களின் கலா­சார நிகழ்­வுகள் இடம்­பெ­ற­வுள்­ளன.
இன்று காலை 6.30 மணி முதல் சுதந்­திர தின நிக்ழ்­வுகள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன. உள்­துறை அமைச்சின் தக­வல்­களின் படிஇ காலை 6.30 மணிக்கு சமயக் கிரி­யைகள் இடம்­பெ­ற­வுள்­ளன. பிர­தா­ன­மாக மரு­தானை மஹா பிரி­வனா விகா­ரை­யிலும்இ கொழும்பு 13 ஸ்ரீ பொன்­னம்­ப­ல­னேஸ்­வர ஆலயம்இ மரு­தானை ஜும் ஆ பள்­ளி­வாசல்இ பொரளை கத்­தோ­லிக்க சகல புனி­தர்­களின் ஆலயம்இ வெள்­ள­வத்தை தென் இந்­திய கிறிஸ்­தவ ஆலயம் ஆகி­ய­வற்றில் இந்த சமய கிரி­யைகள் இடம்­பெ­ற­வுள்­ளன.
இதனை தொடர்ந்து காலை 7.30 மணிக்கு டீ.எஸ்.சேன­நா­யக்­கவின் சிலைக்கு மலர் மாலை அணி­விக்கும் நிகழ்­வுகள் இடம்­பெ­ற­வுள்­ளன. இதனை தொடர்ந்தே ஏனைய நிகழ்­வுகள் இடம்­பெ­ற­வுள்­ளன.

அத்­துடன் இன்­றைய சுதந்­திர தினத்தில் சுதந்­திர தின பிர­க­ட­ன­மா­னது மும்­மொ­ழி­க­ளிலும் வாசிக்­கப்­ப­ட­வுள்­ளமை முக்­கிய அம்­ச­மாகும். கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் சிபா­ரி­சு­க­ளுக்கு அமை­வா­கவும் இலங்­கையில் கடந்த காலங்­களில் பதி­வான இனங்­க­ளுக்கு இடை­யி­லான பிரச்­சி­னைகள் தற்­போது இல்லை என்­பதை வெளிப்­ப­டுத்தும் வித­மா­கவும் இவ்­வாறு மும்­மொ­ழி­க­ளிலும் இந்த பிர­க­டனம் செய்­யப்­ப­ட­வுள்­ளது. இத­னூ­டா­கவே அற்­பு­த­மான நாடு ஒளி­ம­ய­மான நாளை என்ற தொனிப்­பொ­ருளின் கீழ் சுதந்­தி­ர­தினம் இன்று கொண்­டா­டப்­ப­ட­வுள்­ளது.

இந்த நிலையில் இன்­றைய சுதந்­திர தின நிகழ்­வுகள் தொடர்பில் விஷேட போக்­கு­வ­ரத்து ஒழுங்­கு­களை பரா­ளு­மன்­றத்தை அண்­மித்த பகு­தி­களில் பொலிஸார் முன்­னெ­டுத்­துள்­ளனர். அதன்­படி பாரா­ளு­மன்­றத்தை நோக்கி செல்லும் அனைத்து பாதை­களும் இன்று காலை 6 மணி முதல் 11 மணி வரை­யி­லான ஐந்து மணி நேரத்­துக்கு முற்­றாக மூடப்­ப­ட­வுள்­ளன. அதன்­படி பல்­வேறு பிர­தே­சங்­க­ளாக பாரா­ளு­மன்ற வளா­கத்­துக்கு செல்­லத்­தக்க ஐந்து பிர­தான வீதி­களும் இன்று ஐந்து மணி நேரத்­துக்கு போக்­கு­வ­ரத்து தொடர்பில் அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டாது எனவும் அதனால் சார­திகள் மாற்று பாதை­களைப் பயன்­ப­டுத்­து­மாறும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண கேச­ரி­யிடம் குறிப்­பிட்டார்.

அத்­துடன் சுதந்­திர தின கொண்­டாட்­டங்கள் தொடர்­பி­லான பாது­காப்பு ஏற்­பா­டு­க­ளையும் பொலிஸ் தலை­மை­யகம் மேற்­கொண்­டுள்­ள­தாக அவர் மேலும் குறிப்­பிட்டார்.
அதன்­படி 3000 பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் பிர­தான சுதந்­திர தின வைபவம் தொடர்­பி­லான பாது­காப்பு மற்றும் போக்கு வரத்து நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தகவல் தரு­கையில்,

சுதந்­தி­ர­தின வைப­வங்கள் இம்­முறை பாரா­ளு­மன்ற மைதானப் பகு­தியில் இடம்­பெறும் நிலையில் கிம்­பு­லா­வெல சந்தி முதல்இ கியத்ஹேம் சுற்று வட்டம் வரை­யி­லான ஜப்பான் நட்­பு­றவு வீதிஇ பொல்­துவ சந்தி முதல் பாரா­ளு­மன்றம் நோக்­கிய பாரா­ளு­மன்ற வீதிஇ எச்.என்.பீ. சுற்­று­வட்டம் முதல் கியத்ஹேம் சுற்­று­வட்டம்இ டென்ஸில் கொப்­பே­க­டுவ மாவத்தைஇ பெல­வத்தை சந்தி முதல் கியத்ஹேம் சுற்­று­வட்டம் வரை­யி­லான பெல­வத்தை வீதிஇ பாரா­ளு­மன்ற மைதானம் முன் உள்ள வீதி ஆகிய ஐந்­துமே முற்­றாக மூடப்­படும். இது காலை 6.00 மணி முதல் மு.ப. 11 மணி­வரை அமுலில் இருக்கும். இந்த காலப்­ப­கு­தியில் வாகன சார­திகள் அந்த வீதி­களை தவிர்த்து மாற்று வீதி­களைப் பயன்­ப­டுத்­து­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கின்­றனர்.

இதனை விட குறித்த ஐந்து மணி நேர காலப்­ப­கு­திக்குள் 171இ163 இலக்­கங்­களைக் கொண்ட பஸ் வண்­டிகள் நிறுத்­தப்­படும் இட­மா­னது பத்­த­ர­முல்­லை­யி­லி­ருந்து மால­பே­விற்கு மாற்­றப்­ப­டு­கின்­றது. இந்த போக்கு வரத்து நிலை­மை­களை கருத்தில் கொண்டு பொது­மக்கள் செயற்­ப­டவும். என்றார்.
இதே­வேளை இன்­றைய சுதந்­திர தின நிக்ழ்வை முன்­னிட்டு மூன்று பிரி­வு­களை சேர்ந்த சிறை கைதி­க­ளுக்கு பொது மன்­னிப்பு வழங்­கப்­ப­ட­வுள்­ளது. இதற்­கான அனு­மதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் வழங்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் அனைத்து கைதி­க­ளி­னதும் சிறைத்­தண்­டனைக் காலம் ஒரு­வா­ரத்தால் குறைக்­கப்­ப­ட­வுள்­ளன. இத­னை­விட தண்­டப்­பணம் செலுத்த முடி­யாமல் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் அனைத்து கைதிகளும்இ 75 வயதுக்கு மேற்பட்ட பாரதூரமான குற்றங்களில் ஈடுபடாத கைதிகளும் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச் சாலை ஆணையாளர் அலுவலக தகவல்கள் குரிப்பிட்டன.

எவ்வாஅறாயினும் கொலைஇ சிறுவர் துஷ்பிரயோகம்இ பாலியல் பலாத்காரம்இ இலஞ்ச ஊழல் உள்ளிட்ட 24 குற்றங்கள் தொடர்பில் இந்தன் போது கைதிகளுக்கு மன்னிப்பளிக்கப்படமாட்டாது என அறியமுடிகின்றது.

சுமர் 450 வருடங்களுக்கு மேல் பிரித்தானியாவின் காலனித்துவ நாடாக இருந்த இலங்கை 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி சுதந்திர நாடாக பிரகடனம் செய்யப்பட்டது. அன்று முதல் இன்றுவரை ஒவ்வொரு பெப்ரவரி மாதமும் நான்காம் திகதியை தேசிய சுதந்திர தினமாக இலங்கை மக்கள் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply