இலங்கையில் 1972 இற்குப் பின்னரான முதலாவது வரலாற்று நிகழ்வு

இலங்கையின் 67வது சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கலந்து கொண்டார். 1972 ஆம் ஆண்டு இலங்கை ஜன நாயக சோசலிச குடியரசாகப் பிர கடனப்படுத்தப்பட்ட பின்னர் இலங் கையின் சுதந்திர தின நிகழ்வில் தமிழர் களின் முக்கிய தலைவர்கள் எவரும் பங்குபற்றவில்லை. ஆனால் 43 வருடங் களுக்குப் பின்னர் சமஷ்டிக் கட்சியின் சார்பில் ஒருவர் பங்கு பற்றியிருப்பது இதுவே முதற்தடவை. இலங்கையின் 67 ஆவது சுதந்திர தினம் நேற்று புதன் கிழமை ஸ்ரீ ஜெயவர்தனபுர, நாடாளுமன்றத்திற்கு முன்னாலுள்ள மைதானத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் பங்கேற்றார். ஏற்கனவே இன்றைய நிகழ்வில் சுமந்திரனும் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் கலந்து கொள்ளவில்லை.

இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பின்னர் 1972 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி தீர்மானம் ஒன்றை எடுத்திருந்தது. அதில் இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் தமிழ் மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என்றும் எனவே சுதந்திர தின நிகழ்வில் தமிழ் தலைவர்கள் எவரும் பங்கு பற்றுவதில்லை என்றும் அந்த நாளை கறுப்பு பட்டியணிந்து துக்க நாளாகக் கடைப்பிடிப்பதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் போது இரா. சம்பந்தனும் முக்கிய புள்ளியாக இருந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply