சோமாலியாவில் அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் தீவிரவாத தலைவர் பலி

சோமாலியாவில் அல் சபாப் தீவிரவாதிகள் தொடர்ந்து நாச வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அல் கொய்தா அமைப்புடன் இணைந்த இந்த தீவிரவாதிகளை ஒடுக்கும் வகையில், அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜனவரி 31-ந்தேதி தலைநகர் மொகாதிசுவின் தெற்கு பகுதியில் தீவிரவாத தலைவரை குறி வைத்து அமெரிக்கா ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் அல் சபாப் தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர் யூசுப் தீக் என்பவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி நேற்று முன்தினம் கூறுகையில், ‘ஏவுகணை தாக்குதல் முடிவுகள் குறித்து உறுதிசெய்கிற நிலையில் நான் இல்லை. ஆனால் இது வெற்றிகரமாக ஏவப்பட்டது. தீவிரவாத தலைவர் கொல்லப்பட்டு உள்ளார். இந்த தாக்குதலில் பொதுமக்கள் யாரும் இறக்கவில்லை’ என்று தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply