தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சத்துடன் வாழும் சூழல் நாட்டில் இனியொருபோதும் ஏற்படாது : சந்திரிகா

தமிழ், முஸ்லிம் மக்கள் அச்­சத்­துடன் வாழக்­கூ­டிய சூழல் நாட்டில் இனி­யொ­ரு­போதும் ஏற்­ப­டாது. சிறு­பான்மை மக்­களை பாது­காத்து பெற்­றுக்­கொண்ட வெற்­றி­யினை தக்க வைத்­துக்­கொள்வோம் என தெரி­விக்கும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க சட்­ட­ரீ­தி­யாக பெற்­றுக்­கொண்ட ஜன­நா­ய­கத்தை உண்­மை­யா­ன­தாக்கிக் கொள்ள மேலும் முயற்­சிகள் தேவை­யெ­னவும் குறிப்­பிட்டார்.

தேசிய சூறா சபை­யினால் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த சுதந்­திர தின விழாவில் சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்து கொண்­டி­ருந்த போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;

கடந்த காலங்­களில் சிங்­கள தமிழ் முஸ்லிம் சூழல் ஒன்று உரு­வா­கி­ய­மையும் ஆயுதப் போராட்­ட­மொன்று முப்­பது வருட காலம் தொட­ரவும் அர­சியல் ரீதியில் விடப்­பட்ட சில தவ­று­களே கார­ண­மா­னது. எனினும் ஆயுதப் போராட்­டத்­திற்கு முற்­றுப்­புள்ளி வைத்து சுய­மா­ன­தொரு சூழல் நாட்டில் உரு­வாக்­கப்­பட்ட பின்னர் நாடு ஓர­ளவு அமை­தி­ய­டைந்­தது. ஆனாலும் கடந்த காலத்தில் அர­சி­யல்­வா­திகள் ஒரு சிலரின் செயற்­பா­டுகள் சிறு­பான்மை மக்­களின் நிம்­ம­தி­யினை சீர­ழிக்கும் வகையில் அமைந்து விட்­டது. பெற்­றுக்­கொண்ட சமாதா­னமும் அமை­தியும் நிரந்­த­ர­மா­ன­தாக அமை­ய­வில்லை.

கடந்த காலங்­களில் மிகப்­பெ­ரிய வர­லாற்றுத் தவ­றுகள் விடப்­பட்­டன. தமிழர் பிரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வு ஒன்று ஏற்­ப­ட­வில்லை. அவ்­வா­றா­ன­தொரு நிலையில் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரா­கவும் கட்­ட­விழ்க்­கப்­பட்ட அடா­வடி சம்­ப­வங்கள் இடம்­பெற்­றன.

எனினும் இவை அனைத்­திற்கும் முற்­றுப்­புள்ளி வைக்கும் வகையில் ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி நாட்டில் மக்கள் மாற்றம் ஒன்­றினை ஏற்­ப­டுத்தி விட்­டனர். இம்­முறை தேர்­தலில் நூறு வீத­மான வாக்­குகளை தமிழ், முஸ்லிம் மக்கள் எமக்கு கொடுத்­துள்­ளனர். எனவே, புதிய யுக­மொன்று ஆரம்­பித்­துள்­ளது. புதிய அர­சாங்கம் புது­வித ஆட்சி முறைமை இதில் சிறு­பான்மை தமிழ், முஸ்லிம் மக்கள் எவ்­வித அச்­சமும் இன்றி வாழ்­வ­தற்கு நாம் பொறுப்பு. அத்­துடன் மக்கள் அனை­வரும் இன முரண்­பா­டுகள் இன்றி ஒற்­று­மை­யாக செயல்­பட நாம் பொறுப்­புடன் செயற்­ப­டுவோம்.

அதேபோல் சட்­ட ரீதியாக நாம் தற்போது ஒரு ஜனநாயகத்தினை உருவாக்கியுள்ளோம். இதை யதார்த்த பூர்வமாக மக்கள் உணர்ச்சி பூர்வமாக அனுபவிக்கக் கூடிய வகையில் அமைத்துக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply