விபத்துகுள்ளான டிரான்ஸ் ஏசியா விமானத்தின் விமானியை ஹீரோ என புகழும் தைவான் மக்கள்

தைவான் நாட்டின் தலைநகர் தைபேயிலிருந்து கின்மென் தீவு நோக்கி 53 பயணிகள் மற்றும் 5 பணியாளர்களுடன் புறப்பட்ட டிரான்ஸ் ஏசியா விமானம் ஒன்று மூன்றே நிமிடங்களில் அங்குள்ள ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதற்கு விமானத்தின் எஞ்ஜினில் ஏற்பட்ட கோளாறு தான் காரணம் என்றும், இதனால் விமான கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை அது இழக்க நேரிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சாதுர்யமாக செயல்பட்ட விமானி, மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகள் மற்றும் வானுயர்ந்து நிற்கும் கட்டிடங்களின் மீது மோதாமல் இருக்கும் வகையில் விமானம் பயணிக்கும் பாதையை திருப்பினார். இதனால் வழக்கமாக செல்லும் பாதையிலிருந்து விலகிய விமானம் பாலத்தின் மீது மோதி ஆற்றில் விழுந்தது.மிகத்தைரியமாகவும், விழிப்புடனும், அதிக உயிர் சேதங்கள் ஏற்படாத வகையில் விமானி சிறப்பாக செயல்பட்டதாக ஹாங்காங்கை சேர்ந்த விமான போக்குவரத்து ஆய்வாளரான டேனியல் ட்சாங் கூறியுள்ளார். தைபேயில் வசிக்கும் பொதுமக்கள் பலரும் விமானியின் செயலை வெகுவாக பாராட்டியுள்ளதுடன், சமூக ஊடகங்களிலும் விமானியை பாராட்டி கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

அந்நாட்டின் பிரபல நடிகையும், எழுத்தாளருமான கின் ஒய் கூறுகையில், மிக உயர்ந்த கட்டிடங்கள் மீது மோதாமல், விமானத்தை திருப்பிய விமானியை நான் ஹீரோவாக பார்க்கிறேன் என்றார். அந்த விமானி கடைசியாக கூறிய வார்த்தை “மே டே! மே டே! என்ஜினில் தீப்பொறி வெளியாகிறது” என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply