நல்லிணக்கத்தை துரிதமாக்க விசேட ஜனாதிபதி செயலணி

நல்லிணக்க செயற்பாடுகளை துரிதப்படுத்தும் நோக்கில் விசேட ஜனாதிபதி செயலணியொன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மேற்படி ஆலோசனைக்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ண தெரி வித்தார். மேற்படி விசேட ஜனாதிபதி செயலணிக்கு 7 பேர் கொண்ட குழு வொன்றும் அமைக்க திட்டமிடப்பட்டு ள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களினால் இன்று சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 274 தமிழ் கைதிகளின் விடுதலை குறித்தும் இந்த செயலணி ஆராய்ந்து பரிந்துரை செய்யும். இந்த நாட்டில் வாழுகின்ற பல்வேறு இன மக்கள் மத்தியில் நம்பிக்கையீனம், சமூக, கலாசார விரக்தி நிலைகளை ஏற்படுத்தும் வகையில் நீண்டகாலமாக இடம்பெற்று வந்த மோதல்கள் காரணமாக ஏற்பட்ட நிலைமையை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கிலும், நம்பிக்கை, ஒற்றுமை என்பவற்றுடன் சகலரினதும் பங்களிப் புடனான ஒரு இனத்தை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இதனை கருப்பொருளாகக்கொண்டு நல்லிணக்கம் தொடர்பாக விசேட ஜனாதிபதி செயலணி ஒன்றை உருவாக்க நான் தீர்மானித்துள்ளேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். இந்த விசேட ஜனாதிபதி செயலணி நேரடியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் இயங்குவதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தீர்க்கப்படவேண்டிய உடனடி பிரச்சினைகளை இனங்கண்டு பல்வேறுபட்ட இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பரிந்துரைகள் செய்தல். *இந்த மோதல்கள் காரணமாக பிரஜைகளுக்கு அனுபவிக்க நேர்ந்த அழுத்தங்களை போக்குவதற்கு எடுக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பான பரிந்துரைகள். *கடந்தகால மோதல்கள் காரணமாக சிறையிலடைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரை செய்வதற்கும்,

*ஒற்றுமையை மீண்டும் கட்டியெழுப் புவதற்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்து வதற்கும் தேவையான விடயங்களை ஆராய்ந்து பரிந்துரை செய்வதுமே இந்த விசேட ஜனாதிபதி செயல ணியின் பிரதான கடமைகளாக அமையவுள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் 274 பேர் என்பதை பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார் என்றும் அமைச்சர் ராஜித தெரிவித்ததுடன், குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு பெரும் பாலும் ஆதாரங்கள் இல்லாதவர்கள் உடனடியாக விடுதலையாவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply