இலங்கையில் மாற்றம் ஏற்பட அமெரிக்கா ஒத்துழைக்கும்
இலங்கையில் திறந்த மற்றும் ஜனநாயக சமூகத்தை உருவாக்க அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும் என அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சுசைன் ரைஸ் தெரிவித்துள்ளார். வியட்நாம், துனிஷியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு அமெரிக்கா உதவும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின், தேசிய பாதுகாப்பு மூலோபாயங்களை மேம்படுத்துவது குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply