அமெரிக்காவில் 7 பேரைத் துப்பாக்கியால் சுட்டவர் தற்கொலை
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத் தலைநகர் அட்லாண்டா அருகேயுள்ள டக்ளஸ்வில் எனுமிடத்தில் 7 பேரை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட நபர், தானும் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். சனிக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக டக்ளஸ்வில் காவல் துறையினர் தெரிவிக்கையில், சுடப்பட்டவர்களில் 4 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஒரு பெண்ணும் குழந்தைகளும் உள்படுவர். காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இறந்த பெண், துப்பாக்கியால் சுட்டவரின் முன்னாள் மனைவி என்பது உறுதியாகியுள்ளது. உயிரிழந்தவர்களும் காயமடைந்த பிறரும் இவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களா என்பது தெரியவில்லை. எனவே, அவர்களது பெயர்களை இப்போது வெளியிட இயலாது என்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply