பாராளுமன்றத் தேர்தலில் 3 தமிழ் கட்சிகளின் புதிய கூட்டணி!
மூன்று தமிழ்க் கட்சிகள் பாராளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளன. ஈ.பி.டி.பி., ஜனநாயக மக்கள் காங்கிரஸ், சிறிரெலோ ஆகிய கட்சிகளே இவ்வாறு தீர்மானம் எடுத்துள்ளதுடன் ஏனைய கட்சிகளை ஒன்றிணைப்பது தொடர்பிலும் கலந்துரையாடுவதற்கும் முடிவு செய்துள்ளன. ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நேற்று கொழும்பில் இந்தக் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இச்சந்திப்பில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன், சிறிரெலோ கட்சியின் செயலாளர் உதயராசா ஆகியோரும் பங்கேற்றனர்.தற்போதைய நிலையில் எதிர்வரும் தேர்தல்களில் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவதன் மூலமே தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். அதனால், தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்து தொடர்ந்தும் பேச்சு நடத்துவது என்றும் பெரும்பான்மை கட்சிகளுடன் இணையாது எதிர்கால தேர்தல்களில் போட்டியிடுவது என்றும் இந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது.
அடுத்த கட்டமாக ஏனைய தமிழ்க் கட்சிகளுடனும் பேச்சுக்களை நடத்தி ஒன்றிணைந்து போட்டியிடுவது தொடர்பில் ஆராய்வதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply