புலிகளின் தற்கொலைக் குண்டுதாரியின் ஈனச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம் : சிறீலங்கா முஸ்லிம் தகவல் மையம் (பிரித்தானியா)
சிறீலங்கா முஸ்லிம் தகவல் மையம் (பிரித்தானியா) கொட்டப்பிற்றிய ஜிம்மா பள்ளிவாசல் அக்குறஸ்ஸ மீலாத்துந் நதி விழாவில் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரியின் ஈனச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறது.
சிறீலங்கா முஸ்லிம் தகவல் மையம் (பிரித்தானியா) அக்குறஸ்ஸ கொடப்பிற்றிய ஜிம்மா பள்ளிவாசல் வளாகத்தில் 10மார்ச் 2009 காலை 10 மணியளவில் பெருமானார் பிறந்ததின விழா நிகழ்வில் கலந்துகொண்டோரை தாக்கிய புலித் தற்கொலை குண்டுதாரியின் மிலேச்சத்தனமான செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். 1990 லிருந்து வடக்கு, கிழக்கு வடமத்திய மாகாணங்களில் முஸ்லிம்கள், எல்.ரீ.ரீயினரின் பரந்துபட்ட இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள். புலிகள் தொடர்ச்சியாக இறை வழிபாட்டில் இருப்போர் மீதான தாக்குதல்களை ஓட்டமாவடி (ஹியார்) பள்ளிவாசல் சம்மாந்துறை ஜயிரியா பள்ளிவாசல், காத்தான்குடி மீரானியா ஜிம்மா பள்ளிவாசல், குசைனியா பள்ளிவாசல், அக்கரைப்பற்று பள்ளிவாசல் ஆகிய இடங்களில் மேற்கொண்டு குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான தொழுகையில் இருந்த முஸ்லிம்களைக் கொன்றுள்ளார்கள். அக்குறஸ்ஸ கொடப்பிற்றிய ஜிம்மா பள்ளிவாசலில் மத வைபவத்திற்கென கூடியிருந்த மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஈனத்தனமான பயங்கரவாதச் செயல் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான மதத் துவேசத்தினை வெளிப்படுத்தும் புலிகளின் தொடர் பயங்கரவாத செயல் நிகழ்வாகும்.
இந்த தற்கொலைத் தாக்குதலில் தங்களின் அன்பிற்குரியவர்களின் உயிர்களை இழந்து வருந்தும் அவர்களின் குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் வேளையில் இம்மிலேச்சத்தனமான தாக்குதலில் காயமுற்றோரும் மிக விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றோம்.
நாங்கள் இலங்கையர்கள் அனைவரும் மத, சாதி, இன வேறுபாடின்றி புலிகளின் பயங்கரவாதத்தினை இலங்கையில் இல்லாதொழிக்க ஒன்றுபடுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம.
சிறீலங்கா முஸ்லிம் தகவல் மையம் (பிரித்தானியா)
slmic@hotmail.co.uk
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply