ஐரோப்பா வர முயன்ற குடியேறிகள் நடுக்கடலில் உயிரிழந்தனர்
மத்தியத்தரைக்கடல் பகுதியை கடந்து ஐரோப்பாவுக்கு நுழைய முயன்றபோது கடந்த சில நாட்களில் மட்டும, 200க்கும் அதிகமானவர்கள் கடலில் மூழ்கியுள்ளதாக இப்போது கருதப்படுகிறது என அகதிகளுக்கான ஐ நா அமைப்பு கூறியுள்ளது.காற்றடைத்த உயிர்காக்கும் மிதவைப் படகு ஒன்றின் மூலம் வெளியேறி உயிர் தப்பித்தவர்களை இத்தாலியக் கடலோரக் காவல்படையினர் காப்பாறியுள்ளனர்.
அவர்களிடம் பேசி சேகரித்த தகவல்களின் அடிப்படையிலேயே ஐ நாவின் அகதிகளுக்கான அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது.
அதேவேளை வேறு சில சிறிய படகுகளில் தப்பிக்க முயன்றவர்கள் கொந்தளிப்பான கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும் ஐ நாவின் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
லிபியாவிலிருந்து புறப்பட்டவர்களே இப்போது கடலில் மூழ்கியுள்ளனர்.
அந்தக் கடலைக் கடந்து வரும்போது சிக்கித் தவிப்பவர்களை வான்வழியாக மீட்கும் நடவடிக்கையை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இத்தாலி நிறுத்தியது.
ஓராண்டாக நடைமுறையில் இருந்த அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது, மேலும் உயிரிழப்புகளுக்கு வழி வகுக்கும் என்று அகதிகளுக்கான ஐ நா அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply