அதிகாரிகள் கடத்தி சிறைவைப்பு: தைவான் ஜெயிலில் 6 கைதிகள் தற்கொலை
தைவான் நாட்டில் கயோ சியுங் நகரில் மத்திய சிறை உள்ளது. அங்கு கொலை, கொள்ளை மற்றும் போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட பலவித குற்றங்களில் தண்டனை பெற்ற கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அங்கு அடைக்கப்பட்டிருந்த 6 கைதிகள் தங்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக நாடகமாடினர். பின்னர் திடீரென ஜெயில் வார்டனையும், அதிகாரி ஒருவரையும் கடத்தி சிறை வைத்தனர்.பின்னர் அவர்களிடம் ஆயுத கிடங்குக்கு தங்களை அழைத்து செல்லும்படி வலியுறுத்தினர். அங்கு 4 துப்பாக்கிகள், 6 கைத்துப் பாக்கிகள் மற்றும் 200 குண்டுகளையும் எடுத்துக் கொண்டனர்.
அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். தகவல் அறிந்ததும் போலீசார் சிறை சாலையை சுற்றி முற்றுகையிட்டு துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அவர்களால் அங்கிருந்து தப்பிக்க முடியவில்லை.
இதற்கிடையே கைதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதை தொடர்ந்து பிணைக் கைதிகளாக இருந்த 2 அதிகாரிகளும் மீட்கப்பட்டனர்.
இதற்கிடையே தப்பிச் செல்ல முயன்ற 6 கைதிகளும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டனர். முதலில் 4 பேரும் அதன் பின் 2 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து வீடியோ உள்ளிட்ட மற்ற தகவல்களை போலீசார் வெளியிடவில்லை. இந்த சம்பவத்தில் ஏற்பட்ட காயம் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply