மங்கள சமரவீர இன்று ஜோன் கெரியை சந்திக்கிறார்

அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இன்றையதினம் அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. லண்டனில் இருந்து அவர் நேற்று வொசிங்டன் நகருக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் சிறிலங்காவுக்கு எதிரான யுத்தக் குற்ற விசாரணை அறிக்கையை சில மாதங்கள் தாமதித்து முன்வைக்குமாறு தாம் கோரவிருப்பதாக அவர் அமெரிக்காவின் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தின் மீளமைப்பு நடவடிக்கைகளுக்கு கால அவகாசம் தேவை என்ற அடிப்படையில், இந்த இந்த கோரிக்கை முன்வைக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply