அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சராக ஆஷ்டன் கார்ட்டர் தேர்வு
இந்தியாவுக்குச் சாதகமானவர் எனக் கூறப்படும் ஆஷ்டன் கார்ட்டர் (60), அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார்.உலகின் மிக சக்தி வாய்ந்த அமெரிக்க ராணுவத்தில், அதிபருக்கு அடுத்த அதிகாரம் கொண்ட அந்தப் பதவிக்கு அவர் வியாழக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவின் 25-ஆவது பாதுகாப்புத் துறை அமைச்சராக கார்ட்டரைத் தேர்ந்தெடுப்பதற்கு ஆதரவாக, 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட் சபையில் 93 பேர் வாக்களித்தனர்.
இராக்கிலும், சிரியாவிலும் ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போரில் தற்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகலின் செயல்
பாட்டில் அதிபர் ஒபாமாவுக்கு திருப்தி இல்லை எனக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் சக்ஹேகல் பதவி விலகியதாக அறிவித்ததையடுத்து, அந்த இடத்துக்கு ஆஷ்டன் கார்ட்டர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கார்ட்டரின் தேர்வு குறித்து அதிபர் ஒபாமா கூறுகையில், நீண்ட அனுபவம் மிக்க கார்ட்டர் அமெரிக்க ராணுவத்தின் பலத்தைத் தக்க வைத்து, பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராகத் திறம்படப் போரிடச் செய்வார். ராணுவச் செலவினங்களை “இன்னும்’ திறம்பட நிர்வகிப்பார்” என்றார்.
இந்தியாவுக்கு சாதகமானவர்: ஆஷ்டன் கார்ட்டர் இந்தியாவுக்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்டவர் எனக் கூறப்படுகிறது. அவரது முயற்சியில்தான் நவீன ராணுவத் தளவாடங்களின் வடிவமைப்பு, உற்பத்தி ஆகியவற்றில் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்படுவதற்கான பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
பாதுகாப்புத் துறை அமைச்சராக ஆஷ்டன் கார்ட்டர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை இந்திய ஆதரவு செனட் உறுப்பினர்கள் மன்றத்தின் (செனட் இந்தியா காகஸ்) துணைத் தலைவர் மார்க் வார்னர் வரவேற்றுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply