அமெரிக்க பயிற்சி முகாம் மீது ஐ.எஸ். தாக்குதல்
இராக்கில், அந்த நாட்டு வீரர்களுக்கு அமெரிக்க ராணுவத்தினர் பயிற்சியளித்து வரும் விமான தளம் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டனர். எனினும், அந்த முயற்சியை இராக் ராணுவத்தினர் முறியடித்தனர். இராக்கின் அன்பார் மாகாணத்தில் அமைந்துள்ள அல்-பாக்தாதி நகரத்தை அண்மையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைப்பற்றினர். இந்த நகருக்கு 8 கி.மீ. தொலைவில் அல்-அஸாத் விமான தளம் அமைந்துள்ளது. அங்கு முகாமிட்டுள்ள 300 அமெரிக்க வீரர்கள், இராக் ராணுவத்தினருக்குப் பயிற்சியளித்து வருகின்றனர்.அல்-பாக்தாதி நகரைக் கைப்பற்றிய நிலையில், அருகிலிருக்கும் அல்-அஸாத் விமான தளத்தைக் கைப்பற்றும் முயற்சியாக, ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படையினர் அதன் மீது வெள்ளிக்கிழமை தாக்குதல் நிகழ்த்தினர்.
பெரும்பாலும் இராக் ராணுவச் சீருடையணிந்த 20 முதல் 25 வரையிலானபயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர்.
அந்த முயற்சியை இராக் ராணுவத்தினர் முறியடித்தனர். பயங்கரவாதிகள் அனைவரும் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடித்து உயிரிழந்தனர்.
இதுகுறித்து அமெரிக்க ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், அஸ்-அஸாத் விமான தளத்தையொட்டி சண்டை நடைபெற்றபோது அமெரிக்க வீரர்கள் அங்கில்லை. இராக் ராணுவத்தினரே அந்தத் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தனர் என்றார் அவர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply