டென்மார்க்கில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி

சர்ச்சைக்குரிய கார்ட்டூன் பிரசுரித்ததற்காக பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதில் 12 பேர் பலியாகினர். அது போன்ற தாக்குதல் டென்மார்க் தலைநகர் கோபன் ஹேகனில் நடந்தது. அங்குள்ள ஒரு கலாசார மையத்தில் பேச்சு சுதந்திரம் குறித்த விவாத மேடை நடந்தது.இதில் சுவீடன் பத்திரிகையின் காட்டூனிஸ்ட் லார்ஸ் வில்க்ஸ் (68) மற்றும் டென்மார்க்கிற்கான பிரான்ஸ் தூதர் பிரான் கோயிஸ் ஷி மேரே ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதில் 40 வயது மதிக்கதக்க ஒருவர் பலியானார். 3 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் கார்ட்டூனிஸ்ட் லார்ஸ் வில்க்ஸ்சை குறிவைத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். சர்ச்சைக்குரிய கார்ட்டூன் வரைந்ததால் இவருக்கு ஏற்கனவே கொலை மிரட்டல் விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடந்த துப்பாக்கி சூட்டில் இவரும் பிரான்ஸ் தூதரும் காயமின்றி தப்பினர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply