ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதி அமோக வெற்றி

தமிழகத்தில் காலியாக இருந்த ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு கடந்த 13-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் 81.83 சதவீத வாக்குகள் பதிவாகின. இன்று பலத்த பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணியளவில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டன. ஒவ்வொரு சுற்று முடிவின்போதும் அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். 10 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், வளர்மதியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதனால், அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.கடைசி சுற்றான 23-வது சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டபோது, அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதி 151461 வாக்குகள் பெற்றார். தி.மு.க வேட்பாளர் ஆனந்த் 55044 வாக்குகளும், பா.ஜனதா வேட்பாளர் சுப்ரமணியம் 4834 வாக்குகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் 1467 வாக்குகளும் பெற்றனர். இதனால், 96417 வாக்குகள் வித்தியாசத்தில் வளர்மதி வெற்றி பெற்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply