ஜப்பானில் பெட்ரோல் நிலையங்களைவிட கார் பேட்டரி மின்னூட்ட மையங்கள் அதிகம்!

அதிசயம்! ஆனால் உண்மை – ஜப்பானில் பெட்ரோல் நிரப்பும் நிலையங்களைவிட, மின்சாரக் கார்களின் பேட்டரிகளுக்கு மின்னூட்டம் (ரீசார்ஜ்) அளிக்கும் மையங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. இந்தத் தகவலை நிஸ்ஸான் கார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஜப்பான் முழுவதும் 34 ஆயிரம் பெட்ரோல் நிலையங்கள் உள்ளன. அதே வேளையில், அந்நாட்டில் மின்சாரக் கார்களுக்கு மின்னூட்டம் அளிக்கும் மையங்களின் எண்ணிக்கை 40 ஆயிரமாகும். வீடுகளில் மின்சாரக் கார் பேட்டரிகளுக்கு மின்னூட்டம் அளிக்கும் “பிளக் பாயின்ட்’ எண்ணிக்கையும் இந்தப் புள்ளிவிவரத்தில் அடங்கும்.

ஒவ்வொரு பெட்ரோல் நிலையத்திலும் பெட்ரோல் நிரப்ப பல இயந்திரங்கள் உள்ளன. அந்த வகையில் நோக்கும்போது, ஜப்பானில் மின்னூட்ட “பிளக் பாயின்டுகள்’ குறûவுதான். ஆயினும் மின்சாரக் கார்களுக்கு அந்த நாட்டில் வரவேற்பு அதிகரித்து வருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என நிஸ்ஸான் தெரிவித்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply