உண்மைகளைக் கண்டறிவதற்கு இறுதிவாய்ப்பு : சுமந்திரன்

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் இலங்கை மீதான யுத்த குற்ற விசா­ரணை அறிக்­கை­ பிற்­போ­டப்­பட்­டி­ருப்­ப­தா­னது இலங்­கையின் உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றை­யினை பலப்­ப­டுத்தி உண்­மை­களை கண்­ட­றிய கிடைத்­துள்ள இறுதி வாய்ப்­பாக கரு­த­வேண்டும் என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­திரன் தெரிவித்தார். விசா­ரணை அறிக்­கை­ பிற்­போ­டப்­பட்­டி­ருப்­பதன் மூலம் இது­வரை வெளி­வ­ராத பல உண்­மைகள் வெளி­வரும் சாத்­தியம் உள்­ள­தெ­னவும் அவர் குறிப்­பிட்டார்.

எதிர்­வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரி­மைகள் பேரவையின் இலங்கை தொடர்­பான அறிக்கை வெளி­வ­ரு­மென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குறித்த அறிக்கை பிற்­போ­டப்­பட்­டுள்­ளமை தொடர்பில் கூட்­ட­மைப்­பிடம் வின­விய போதே சுமந்­திரன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது,

இலங்­கையில் யுத்­தத்தில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசா­ரணை நடத்­து­வ­தென்­பது சர்­வ­தே­சத்தின் தீர்­மானம். இலங்­கையின் போர் குற்­றங்கள் தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டு­மென சென்ற வருடம் மார்ச் மாதம் ஐ.நா. வினால் தீர்­மா­ன­மொன்று கொண்டு வரப்­பட்­டது. இதற்­க­மைய உண்மை கண்­ட­றி­யப்­பட வேண்டும் என்­பது எம் அனை­வ­ரி­னதும் கோரிக்கை.

அதேபோல் நல்­லி­ணக்க செயற்­பாட்­டினை இலங்­கையில் ஏற்­ப­டுத்த வேண்­டு­மாயின் உண்­மைகள் கண்­ட­றி­யப்­பட வேண்டும். இத­னையே தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு சர்­வ­தே­சத்­தி­டமும் இலங்கை அர­சாங்­கத்­தி­டமும் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வந்­தது.

எனினும் கடந்த காலங்­களில் உள்­ளக விசா­ர­ணைகள் மற்றும் சர்­வ­தேச விசா­ரணை பொறி­முறை தொடர்பில் முன்­னைய அர­சாங்கம் அக்­க­றை­யின்­றியே செயற்­பட்­டது. யுத்த குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் தீர்­வு­களை காணவோ விசா­ர­ணைகள் மூலம் உண்­மை­களை கண்­ட­றி­யவோ கடந்த அர­சாங்கம் முயற்­சிக்­கவோ அக்­கறை செலுத்­தவோ இல்லை.

அவ்­வா­றா­ன­தொரு நிலையில் ஆட்சி மாற்­றத்தின் பின்னர் தற்­போது உள்­ளக மற்றும் சர்­வ­தேச விசா­ர­ணைகள் தொடர்பில் புதிய அர­சாங்கம் அக்­கறை செலுத்­து­கின்­றமை முக்­கி­ய­மா­ன­தொரு மாற்­ற­மாகும். உள்­ளக விசா­ர­ணை­களை பலப்­ப­டுத்தி தீர்வு காணும் நோக்கில் சர்­வ­தேச விசா­ரணை அறிக்­கை­யினை பிற்­போட அர­சாங்கம் கால அவ­காசம் கேட்­டுள்­ளது. இது­வரை காலமும் அர­சாங்கம் சர்­வ­தேச விசா­ரணை பிற்­போ­டப்­ப­டு­வ­தற்­கான கார­ணத்­தினை தெளி­வாக தெரி­விக்­கா­ததன் கார­ணத்­தி­னா­லேயே அடுத்த மாதம் ஐ.நா. அறிக்­கை­யினை வெளி­யிடக் கோரி­யி­ருந்தோம்.

எனினும் தற்­போது ஐ.நா. விசா­ரணை அறிக்­கை­யினை பிற்­போ­டு­வ­தற்கு அதுவும் 6 மாத காலத்­திற்கு மட்டும் பிற்­போ­டப்­ப­டு­வது என்ற அடிப்­ப­டையில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அதுவும் இலங்கை அர­சாங்­கத்தின் வேண்­டு­கோ­ளுக்கு அமைய எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் வரை இலங்கை அர­சாங்­கத்­திற்கு உண்­மையை கண்­ட­றியும் உள்­ளகப் பொறி­மு­றை­யினை பலப்­ப­டுத்­தக்­கோரி கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது. இதில் இலங்­கையில் தற்­போது ஏற்­பட்ட அர­சியல் மாற்­றங்கள் எந்த அள­விற்கு சாத­க­மா­ன­தென்­பது தொடர்பில் நாம் கருத்து தெரி­விக்க விரும்­ப­வில்லை.

ஆயினும் இலங்கை அர­சாங்கம் தெரி­வித்­துள்ள உள்­ளக விசா­ரணை செயற்­பா­டுகள் மற்றும் இறுதி யுத்­தத்தில் இடம்­பெற்ற மனித உரிமை செயற்­பா­டுகள் தொடர்பில் உண்­மை­களை கண்­ட­றிய செயற்­ப­டு­வது என்­பது வர­வேற்­கத்­தக்க விட­ய­மாகும்.

எனவே சர்­வ­தேச அழுத்­தத்­துடன் இலங்­கையின் உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றை­யினை பலப்­ப­டுத்தி விசாரணைகளை மேற்கொள்வதன் மூலம் இதுவரை வெளிவராத புதிய உண்மைகள் வெளிவருவதற்கான சாத்தியம் அதிகமாகவே உள்ளது. அத்தோடு உள்ளக விசாரணைப் பொறிமுறையினை மேலும் பலப்படுத்தி விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டுள்ள இறுதி சந்தர்ப்பம் இதுவே. எனவே இதனை இலங்கை அரசாங்கம் மிகச் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply