மஹிந்தவுக்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பிப்பு

நாட்டுக்கு எதிரான சதி முயற்சி தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான மூன்று நீதியரசர்களை கொண்ட குழு இந்த உத்தரவை பிறப்பித்தது. முன்னிலை சோசலிஸக் கட்சியின் தலைவர் துமிந்த நாகமுவ தாக்கல் செய்த மனுவின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு அடுத்த நாள் ஜனவரி 9ஆம் திகதியன்று கொழும்பில் முப்படைகளையும் தயார்படுத்தி, நாட்டில் குழப்ப சூழ்நிலையை ஏற்படுத்த முனைந்தார் என்ற குற்றச்சாட்டே மஹிந்த ராஜபக்ச மீது சுமத்தப்பட்டுள்ளது.

இது அரசியல் அமைப்பின்படி அடிப்படை உரிமை மீறல் செயலாகும் என்று மனுதாரர் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply