ஐ.எஸ்.அமைப்பின் முக்கிய தலைவர்களைக் கொல்ல பட்டியல் தயாரிக்கிறது அமெரிக்கா
ஐ.எஸ்.அமைப்பின் முக்கிய தலைவர்களைக் கொல்வதற்கு, அமெரிக்கா பட்டியல் ஒன்றைத் தயாரித்து வருகிறது. அந்தப் பட்டியலில் தற்போது 24 முக்கியத் தலைவர்கள் உள்ளனர். அவர்களில் முதலிடத்தில் ஐ.எஸ்.அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா தன்னைக் கொல்வதற்குத் தேடி வருகிறது என்று அல் பக்தாதிக்கு நன்றாகவே தெரியும். அதனால் எங்கோ ஓரிடத்தில் பதுங்கியுள்ளார்.
எனினும், இராக் மற்றும் சிரியா பகுதிகளில் தனது ஆதிக்கம் விரிவடைந்து வந்தாலும் வெளியே வராமல், மிகவும் ஜாக்கிரதையாக ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்குப் பதுங்கிச் செல்கிறார் என்று அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. அமெரிக்கா ஏற்கெனவே இப்படியொரு பட்டியலைத் தயாரித்திருந்தது. அதில் இடம் பெற்றிருந்தவர்களில் வேதி ஆயுத நிபுணர் உட்பட 12 பேரை அமெரிக்கா கொன்றுள்ளது. அந்தப் பட்டியலில் தற்போது புதிதாகச் சிலர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
ஐ.எஸ்.அமைப்பில் வேற்று நாட்டுப் பிணைக் கைதிகளை கொல்லும் ‘ஜிகாதி ஜான்’ போன்ற நபர்களும் அமெரிக்காவின் தேடலில் இருந்தாலும், அந்த அமைப்பினருக்கு உத்தரவிடும் தளபதி மற்றும் அமைப்பைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நபர் உள்ளிட்டவர்களதான் மிகத் தீவிரமாகத் தேடப்பட்டு வருகிறார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply