ஐ.எஸ். இயக்கத்தில் இந்தியர்கள் உட்பட 20,000 வெளிநாட்டினர் உள்ளனர்: அமெரிக்கா
இந்தியா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 20,000-க்கும் அதிகமானோர் இராக் மற்றும் சிரியாவுக்கு சென்றுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்தார்.’சிரியா, இராக்கில் போராட்டம் தொடங்கியதிலிருந்து, அதில் இணைவதற்காக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து பலரும் படையெடுத்துச் சென்றுள்ளனர். இந்த எண்ணிக்கை 20,000-க்கும் அதிகமானதாக உள்ளது. இது மிகவும் ஆபத்தான சூழல்’ என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறும்போது, “70-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இளைஞர்கள், போராளிகள் என்ற பெயரில் சென்று இணைவது குறித்த அடித்தளச் சூழலை ஒபாமா தலைமையிலான அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நூற்றுக்கணக்கான நாடுகளிலிருந்து சிரியாவுக்கு படையெடித்துச் சென்றுள்ளனர். போர்ச் சூழலின் துவக்கத்தில் மேற்கத்திய நாடுகளிலிருந்து மட்டும் சுமார் 3,400 பேர் சென்றிருக்கின்றனர். இந்தியாவிலிருந்து பலர் ஐ.எஸ். இயக்கத்தில் சேரச் சென்றிருக்கின்றனர்.
பயங்கரவாதத்தை எதிர்கொள்வது தொடர்பாக வெள்ளை மாளிகையில் நடந்த உச்சி மாநாட்டில், தகவல் பகிர்வு அமைச்சகத்தை அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளது. இந்த அமைச்சகம் மற்ற நாடுகளிலிருந்து போர்ச் சூழல் நிலவும் பகுதிகளுக்கு மக்கள் எந்த வகையில் சென்று இணைகின்றனர் என்பது போன்ற தகவல்களை மற்ற நாடுகளிலிருந்து இந்த அமைச்சகம் பெறும்.
இந்த மாநாட்டில் ஆஸ்திரேலியா, கனடா, டென்மார்க், ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் ஐ. நா பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
அடுத்த வாரத்தில், மேல் குறிப்பிட்ட நடவடிக்கைகள் குறித்த உலகளாவிய தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான கருத்தரங்கம் நடைபெறும். இதில் நாடுகளிலிருந்து தீவிரவாத இயக்கங்கள் மற்றும் போர்ச் சூழல் நிலவும் பகுதிகள் மற்றும் அங்கு இருக்கும் நிலைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து விரிவாகப் பேசப்படும்” என்றார் அவர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply