ராமேசுவரம், மண்டபம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல்

தனுஷ்கோடி கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம், மண்டபம் பகுதி மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தி, மீன்பிடி சதானங்களை சேதப்படுத்தி விரட்டியடித்தனர். ராமேசுவரம், மண்டபம் பகுதியிலிருந்து புதன்கிழமை காலையில் 500-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் தனுஷ்கோடி கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.

அந்த பகுதியில் சிறிய கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், 100-க்கும் மேற்பட்ட மீனவப் படகுகளை சுற்றி வளைத்து விரட்டியடித்துள்ளனர்.

இதில் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த கெம்ப்லஸ் என்பவரின் படகை பிடித்து படகிலிருந்த அந்தோனிராஜ், ஆரோக்கியம், அருள், வரதராஜன், நிக்ஸல், ஜேசு ஆகிய 6 மீனவர்களை தாக்கினர். மீன்பிடிக்க உதவும் ஜி.பி.எஸ், கருவி உள்பட மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி விரட்டியடித்தனர்.

அதுபோல மண்டபம் கோயில்வாடி பகுதியிலிருந்து சென்ற ஆரேக்கியமரியம் என்பவரின் படகில் இருந்த 5 மீனவர்களையும் கம்பால் தாக்கிய இலங்கை கடற்படையினர், படகின் மேல் பகுதியில் இருந்த பந்தக்கால், வீஞ்சி கட்டை ஆகியவற்றை சேதப்படுத்தினர். பின்னர் மீன் சேமிப்பு குளிர்சாதன பெட்டியை சேதப்படுத்தி கடலில் தூக்கி வீசிவிட்டு, இந்த பகுதியில் மீன்பிடிக்க வரக்கூடாது என எச்சரித்து சென்றுனர்.

தாக்குதலுக்கு உள்ளான மீனவர்கள் அந்த பகுதியிலிருந்து படகுகளை ஒட்டிக்கொண்டு ராமேசுவரம் கடலோரப் பகுதியில் வந்து மீன்களை பிடித்து கொண்டு வியாழக்கிழமை காலையில் வந்து சேர்ந்தனர்.

இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் ரூ.2 லட்சம் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தாக்குதலுக்கு உள்ளான ராமேசுவரம் மீனவர் அந்தோனிராஜ் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply